நடிகர் தர்மேந்திரா டிஸ்சார்ஜ்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மும்பை: பிரபல ஹிந்தி நடிகர் தர்மேந்திரா, 89, ஷோலே உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். மூச்சுத்திணறல் காரணமாக, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, நடிகர் தர்மேந்திரா மரணம் அடைந்துவிட்டதாக சில ஊடகங்கள தவறான செய்தி வெளியிட்டன. இதற்கு அவரது மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி மற்றும் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று காலை மருத்துவமனையில் இருந்து தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பிரதித் சாம்தானி கூறியதாவது: நடிகர் தர்மேந்திரா குணமடைந்ததை தொடர்ந்து, நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து வீட்டில் வைத்து தர்மேந்திராவுக்கு சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். தற்போது அவரது உடல் நிலை குறித்து நான் எதுவும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.