உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இல்லாத ‛‛பிளாட்டிற்கு விளம்பரம் செய்து சிக்கலில் மாட்டிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ்

இல்லாத ‛‛பிளாட்டிற்கு விளம்பரம் செய்து சிக்கலில் மாட்டிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ்

ரங்காரெட்டி: ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, அதில் இல்லாத ஒரு இடத்தின் பெயரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதை நம்பி அந்த இடத்தை வாங்க முதலீடு செய்த நபர் ஒருவர், ரூ.34.8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக புகாரளித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தெருவுக்கு தெரு டீக்கடை இருப்பது போல, ரியல் எஸ்டேட் பிஸ்னஸூம் கொடிகட்டி பறக்கிறது. இடம், வீடு வாங்குவது அனைவரின் கனவாக இருக்கும் நிலையில், இந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அவர்களுக்கே வலை விரிக்கின்றனர். குறிப்பாக சென்னைக்கு 50, 60 கி.மீ தொலைவில் உள்ள இடத்தையும், மிக அருகில் மிக அருகில் என சொல்லி சொல்லி விற்று விடுகின்றனர். பலரும் அந்த விளம்பரங்களை நம்பி முதலீடு செய்து சிலர் ஏமாற்றத்தையும் சேர்த்தே பெறுகின்றனர். அந்த வகையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்து, நில மோசடி வழக்கில் சிக்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. அதாவது ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்த மகேஷ்பாபு, அதில் இல்லாத ஒரு இடத்தின் பெயரையும் குறிப்பிட்டு நடித்துள்ளார். இதனை நம்பி முதலீடு செய்த ஒருவர், தான் நஷ்டம் அடைந்ததாக தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத்துறை

கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை சார்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட பண மோசடி விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமத்தின் பிராண்ட் அம்பாஸ்டராக அவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகேஷ் பாபு பணம் மற்றும் செக் மூலமாக ரூ.5.9 கோடிகள் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் பணம் மட்டுமல்லாமல், சட்ட விரோதமாக வேறு ஏதேனும் பொருள் அல்லது அசையும், அசையா சொத்தும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரித்து வருகிறது.

இல்லாத இடம்

மேலும், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமத்தின் ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்த மகேஷ்பாபு, அதில் அவர் பயன்படுத்திய பெயர்களில் இல்லாத ஒரு இடத்தின் பெயரையும் சொல்லியுள்ளார். அதுதான் தற்போதைய பிரச்னைக்கு காரணம். மருத்துவர் ஒருவர் அளித்த புகாரில், நடிகரை நம்பி முதலீடு செய்ததில் ரூ.34.8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என குறிப்பிட்டு ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில், மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விரைவில் விசாரணைக்கு ஆஜராகலாம் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Venkatesan Anantharaman
ஜூலை 13, 2025 08:32

Mahesh Babu should demand compensation from the developer for misleading him. Hereafter, before promoting residential plots Mahesh Babu should visit the layout, satisfy himself that they are Government, CREDA, approved and that they conform to all prevailing rules and regulations. Mahesh Babu is a highly respected film personality he himself does a lot of ity. If he recommends investment in any layout, prospective investors will believe the developer is a promoter of integrity.


Raghavan
ஜூலை 07, 2025 21:06

5 நிமிடத்தில் உங்களுடைய இடத்தில் இருந்து மிக அருகாமையில் உள்ள ஸ்கூல், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் சென்றுவிடலாம் என்பார்கள். ஆனால் எதில் போனால் 5 நிமிடத்தில் சென்று அடையலாம் என்பதை சொல்லமாட்டார்கள். சொன்னால் வியாபாரம் படுத்துவிடும். அநேகமாக ஹெலிகாப்டரில் போனால்தான் 5 நிமிடத்தில் சென்று அடையமுடியும்.


Padmasridharan
ஜூலை 07, 2025 15:55

சுரானா இன்டர்நேஷனல் ஸ்கூல் பெசன்ட்நகரில் உள்ளது. இது இந்த குழுமத்துடன் சம்மந்தப்பட்டதா சாமி. .


.
ஜூலை 07, 2025 15:37

ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் விளம்பர நிறுவனம் மூலம் விளம்பரத்தின் வசன வாசகங்களை தயாரித்துத் தந்திருக்கும். விளம்பரத்தையும் நன்கு பரிசீலித்த பின்பே வெளியிட்டிருக்கும். இவற்றை பரிசீலனை செய்யும் வாய்ப்பு நடித்தவர்களுக்கு இருக்காது. இது போல வழக்குகளை போட்டால் நேர்மையான விளம்பரத்தில் கூட நடிக்க ஆள் வராது.


சமீபத்திய செய்தி