உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்புரான் சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த மோகன்லால்: பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு

எம்புரான் சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த மோகன்லால்: பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: எம்புரான் படத்தில் பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்குவதாக முடிவு செய்துள்ளதாகவும், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் பிரபல நடிகர் மோகன் லால் அறிவித்துள்ளார்.மல்லுவுட்டில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் எம்புரான். அரசியல் பின்னணியை மையமாக கொண்டு பின்னப்பட்ட கதைக் களத்தில் வெளியான லூசிபர் படத்தின் 2ம் பாகம். படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ள எம்புரானில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியல் ரீதியாகவும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், படத்தில் நடித்த பிரபல நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது; லூசிபர் படத்தின் 2ம் பாகமாக வெளிவந்திருக்கும் எம்புரான் படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல், சமூக கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தி இருப்பதை அறிந்தேன்.கலைஞனாக எந்த படமும் எந்த ஒரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வு கொண்டிருக்க வில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை.எனவே, அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக நானும், படக்குழுவினரும் உண்மையிலேயே வருந்துகிறோம். அந்த பொறுப்பு படத்திற்கான உழைத்த அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்கிறோம்.ஆகையால் படத்தில் இருந்து இதுபோன்ற காட்சிகளை கட்டாயமாக நீக்க முடிவு செய்திருக்கிறோம். 4 தசாப்தங்களாக திரையுலக வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும், நம்பிக்கையும் மட்டுமே எனது பலம். அதை விட மோகன்லால் யாரும் இல்லை என்பதை நம்புகிறன்.இவ்வாறு மோகன்லால் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

நிக்கோல்தாம்சன்
மார் 30, 2025 20:29

இந்த படத்தை இயக்கியவர் தான் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்


Karthik
மார் 30, 2025 21:45

Well said..


vadivelu
மார் 30, 2025 19:21

சினிமாவில் உண்மையில் அயோக்கியனாக இருந்த ஒரு அரசியல் தலைவனை கூட அப்படி காட்ட உடையாது, அப்படி இருக்கையில் ஏன் பொய்யாய் சிலரை திருப்தி அடுத்த காட்சிகளை அமைக்க வேண்டும்.


Appa V
மார் 30, 2025 19:13

வழக்கமா தம்புராட்டி சத்திரத்தில் ஒரு ராத்திரி அவளோட ராவுகல் இந்த மாதிரி மல்லு படங்கள் தானே பிரச்னை இல்லாம ஓடும்


S.R
மார் 30, 2025 18:58

நீங்கள் செய்ய வேண்டிய பாதிப்பை செய்து விட்டீர்கள். கதை கேட்காமல் தான் ஒத்துக் கொண்டீர்களா? படம் போது புரியவில்லையா? பணத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வீர்கள். உங்கள் ரசிகையாக மலையாளம் புரியாவிட்டாலும் 35 ஆண்டுகள் இருந்தேன். மனம் இப்போது வெறுத்து இட்டது. ஏற்கனவே இந்து /இஸ்லாமியர் நடுவில் அரசியல் புகுந்து கேட்டது செய்கிறார்கள். இப்போது நீங்கள் வேறு கூடி விடுகிறீர்கள். பணம் பெரிது இல்லை. கொள்கைதான் என்று என் இருக்க முடியவில்லை. வருத்ததுடன் சகோதரி


Sampath Kumar
மார் 30, 2025 17:41

படத்தை படமாக என்னைக்கு பார்க்க ஓரணுக்க என்று தெரிய வில்லை உண்மையை சொன்னால் பலருக்கு கசக்காது நிற்றல் அது நிச்சயம் உண்மைதான் அதை ஏடுத்து சொன்ன மோகன்லால் அவர்களை பாராட்டுகின்றன்


தமிழ்வேள்
மார் 30, 2025 20:45

விஸ்வரூபம்,கேரளா ஸ்டோரி, போன்ற படங்களுக்கு ஏன் பொங்கினீர்கள்? அவற்றையும் படமாக தானே பார்த்து இருக்க வேண்டும்?


sankaranarayanan
மார் 30, 2025 17:29

மல்லுவுட்டில் தயாரித்த படமென்றால் மல்லுக்கட்டித்தான் வெளி வரவேண்டுமா என்ன இது? ஏன் முதலிலேயே இவைகளை நீக்கி இருந்தால் சச்சரவுகள் வந்திருக்காதே.


முருகன்
மார் 30, 2025 17:29

சினிமாவை சினிமாவக பார்க்க கூடிய அறிவு என்று தான் வரும்? மராத்திய மன்னர் சிவாஜியை பற்றிய படம் மட்டும் வெற்றி அடைய வேண்டும்


K MANIGANDAN
மார் 30, 2025 16:43

உண்மையில் நீங்கள் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து விட்டீர்கள் நன்றி


karupanasamy
மார் 30, 2025 16:32

இந்ததிரைப்படம் வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தால் சரியான முடிவு என்று பாராட்டலாம், ஆனால் இவன் ஒரு மிகப்பெரிய திருடன், மக்கள் இந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டு எவரேனும் டிக்கெட் வாங்கி திரை அரங்கத்திற்கு செல்வதை தடுக்கவேண்டும்.


B N VISWANATHAN
மார் 30, 2025 16:23

என்ன ஒரு முதிர்ச்சி உள்ள வார்த்தைகள். அகங்காரம் இல்லாத தொநி. இதுதான் மோலிவுட் படங்கள் வெற்றிக்கு பெரும் பலம்.


சமீபத்திய செய்தி