உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயர் துண்டித்தும் பிரசாரத்துக்கு இடையூறு; திமுக மீது விஜய் குற்றச்சாட்டு

மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயர் துண்டித்தும் பிரசாரத்துக்கு இடையூறு; திமுக மீது விஜய் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகை: 'மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயரை துண்டித்தும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பிரசாரத்துக்கு திமுக இடையூறு செய்வதாக நாகையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவரும், நடிகருமான விஜய் குற்றம் சாட்டினார்.தமிழகத்தில், 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், பிரசாரம் செய்ய நடிகரும், தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=83myxweo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செப்., 13ம் தேதி திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில், அவர் பிரசாரம் செய்தார். அந்த வகையில், இன்று (செப் 20) நாகையில் தேர்தல் பிரசாரம் செய்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புத்தூரில் விஜய் பேசியதாவது: இப்பொழுது நான் எந்த மண்ணில் நின்று கொண்டு இருக்கிறேன் தெரியுமா? நாகூர் ஆண்டவர் அன்போடு, மாரியம்மன், வேளாங்கண்ணி ஆசியோடு எனது மனதிற்கு ரொம்ப நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசுகிறேன்.உங்கள் அனைவருக்கும் என்றைக்கும் ஒரு மீனவ நண்பனாக இருக்கிற இந்த விஜய்யோட அன்பு வணக்கங்கள்.இந்த கப்பல் இருந்து வந்து இருக்கும் பொருட்களை எல்லாம் விற்பனை செய்வதற்கு அந்த காலத்தில் அந்தி கடைகள் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். உழைக்கிற மக்கள் இருக்கும் இடம் தான் நாகப்பட்டினம்.

14 ஆண்டுகளுக்கு முன்

மத வேறுபாடுகள் இல்லாத, மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் உங்களுக்கு மீண்டும் வணக்கங்கள். தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2ம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் ஹார்பர் தான். ஆனால் அங்கு நவீன வசதிகள் கூடிய மீன்கள் பதப்படுத்தும் வசதி இல்லை. ரொம்ப அதிகமாக குடிசைப்பகுதிகள் இருக்கும் இடம் தான் நாகப்பட்டினம். இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும் மதுரை மாநாட்டில் பேசி இருந்தேன். அது தவறா? மீனவர்களுக்கு குரல் கொடுப்பது நமது கடமை. 14 ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தினேன்.

இதுதான் வித்தியாசம்

இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்று புதுசு இல்லை கண்ணா, முன்னாடி விஜய் மக்கள் இயக்கம் என்று வந்து நிற்போம். இப்பொழுது தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.மீனவர்கள் உயிர் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு ஈழத் தமிழர்களின் கனவுகளும், வாழ்க்கையும் நமக்கு முக்கியம். மீனவர்கள் கஷ்டத்தை பார்த்து ஒரு கடிதம் எழுதிவிட்டு கப்சிப் என்று போவதற்கு நாம் கபட நாடக திமுக அரசு கிடையாது.

வெளிநாட்டில் முதலீடா?

சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும், சுயநலமும் தான் அரசிற்கு முக்கியமான வேலை. இங்கு இருக்கும் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். முதல்வர் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அத்தனை கோடி, இத்தனை கோடி முதலீடு என்று சிஎம் சிரித்து கொண்டே சொல்வார்.சிஎம் சார் மனதை தொட்டு சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? அல்லது வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழகத்துக்கான முதலீடா? உங்கள் குடும்பத்தோட முதலீடு வெளிநாட்டிற்கு போகுதா? நாகையில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தினால் குறைந்தா போவார்கள்?பெரம்பலூர் பகுதி மக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். சீக்கிரமாக உங்களை தேடி நான் வருவேன். சுற்றுப்பயணம் போட்ட பிறகு, சனிக்கிழமை என்று பேசினார்கள். உங்கள் எல்லோரையும் நான் வந்து பார்க்கும் போது எந்த பிரச்னையும் இருந்து விடக்கூடாது என்பதற்காக, சனிக்கிழமை பிரசாரம். முக்கியமாக உங்களது வேலைக்கு எந்த பிரச்னை வந்து விடக்கூடாது. ஓய்வு நாட்களில் வர வேண்டும் என்பது தான் எண்ணம். அரசியலில் சிலருக்கு நாம் ஓய்வும் கொடுக்க வேண்டும் இல்லையா?

பேசுவதே 3 நிமிடம்

பிரசாரத்துக்கு எத்தனை இடையூறுகள்? அஞ்சு நிமிஷம் தான் பேசணும்; பத்து நிமிஷம் தான் பேசணும் என்று. நான் பேசுவதே 3 நிமிடம். அதில் அதனை பேசக் கூடாது என்றால் நான் எதை தான் பேசுவேன்? பிரதமர் வந்தால் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்குமா? பிரசாரம் சென்றால் மின்தடை செய்கின்றனர். ஸ்பீக்கர் வயரைக் கட் பண்ணுறாங்க, மக்களைப் பார்த்து சிரிக்கக்கூடாது, மக்களைப் பார்த்து கையசைக்கக்கூடாது எனக் கட்டுப்பாடுகள்; எங்களுக்கு மட்டும் அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். செம்ம காமெடியாக இருக்கிறது.நேரடியாகவே கேட்கிறேன் சிஎம் சார், மிரட்டி பார்க்கிறீர்களா? முதல்வர் அவர்களே,என்ன செய்து விடுவீர்கள்? குடும்பத்தை வைத்து கொள்ளை அடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? நான் தனி ஆள் இல்லை, மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி. பெண்கள் சக்தியின் பிரதிநிதி சார்.

பூச்சாண்டி வேலை

2026ல் இரண்டே பேருக்கு இடையில் தான் போட்டி. ஒன்று திமுக. மற்றொன்று தவெக. பூச்சாண்டி வேலை வேண்டாம். நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள். பார்த்துவிடலாம். கொள்கையை பேருக்கு மட்டும் வைத்து விட்டு குடும்பத்தை வைத்து தமிழகத்தை கொள்ளையடிக்கும் நீங்களா? தமிழகத்தின் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஒருத்தனாக இருக்கிற நானா? பார்த்துவிடலாம். மீண்டும் தடைகள் போட்டால் மக்கள் அனுமதி பெற்று பிரசாரத்திற்கு வருவேன். சிஎம் சார்.நமக்கு தடையாக போடும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? உங்கள் நல்லதுக்காக தவெக ஆட்சி அமைய வேண்டுமா? இந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது. மன உறுதியுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம். இவ்வாறு விஜய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

xyzabc
செப் 21, 2025 01:48

Nagapattinam continues to be a neglected town in dmks agenda. It became a railway junction. The shipping services to Sri Lanka possible. All because of the central government.


ramesh
செப் 20, 2025 21:12

உங்கள் கட்சியில் இருந்தே பாதுகாப்புக்கு மின்சார வாரியம் அலுவலகத்தில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்க சொல்லி கொடுத்த விண்ணப்பம் வெளியில் வந்து விட்டது . வயர் இல்லாத மைக் வைத்து கொண்டு மைக் வயரை துண்டித்து விட்டார்கள் என்று எப்படி கதை விடுகிறீர்கள் . தாங்கள் கில்லி படத்தில் சொல்லுவது போல சின்ன பிள்ளை தனமா அல்லவா இருக்கு என்று உங்களை பார்த்து கேட்க தோன்றுகிறது . ஆயிரக்கணக்கன தொண்டர்கள் முன்பு பேசுகிறீர்கள் . அவர்கள் முன்பு யாராவது வந்து உங்கள் மைக் வயரை துண்டிக்க முடியுமா . இன்னும் தாங்கள் அரசியலில் பொய் சொல்லுவதில் LKG மாணவன் போல இருக்கிறீர்களே


திகழ்ஓவியன்
செப் 20, 2025 20:37

எனக்கென்னவோ DMK கொடுக்கும் குடைச்சல் பார்த்து தேர்தலில் நிற்க மாட்டார் என்றே தெரிகிறது


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
செப் 20, 2025 18:36

மின்தடை செய்ய சொல்லி அவரது மாவட்ட செயலாளரே கடிதம் அனுப்பியுள்ளாராமே...


vbs manian
செப் 20, 2025 18:33

பந்தா இல்லாமல் எதார்த்தமாக பேசுகிறார். கடல் ஆராய்ச்சி மீனவர் தேவைகள் பற்றி சொன்னது பிரமாதம். தமிழ் நாட்டுக்கு நீண்ட கடற்கரை. கடல் அதிகம் ஆராயப்படாத சுரங்கம். அண்ணாமலை பல்கலையில் உள்ள marine biology போன்ற பாடங்களை பல்கலைகளை பல இடங்களில் ஆரம்பிக்கலாம். நிறைய இளைஞர்களுக்கு எதிர்காலம் பிறக்கும். கிறிஸ்துவ வோட் நிறைய விழும். பல தொகுதிகளில் முடிவுகள் மாறும். இந்த விண்வெளி யுகத்துக்கு ஏற்ப தன சிந்தனைகளை கொஞ்சம் சீரமைத்தால் நீண்ட தூரம் போவார். பெரியார் திராவிடம் புளித்து போய் விட்டது. வெளியே வாருங்கள்.


vbs manian
செப் 20, 2025 18:23

இவர் விஷயத்தில் கழகம் தன் வக்கிர பார்வையை திருப்பி உள்ளது. ஏன் மற்றவர்கள் கட்சி ஆரம்பிக்க கூடாதா. தமிழ்நாடு இவர்களின் ஏக போக உரிமையா. வல்லவனுக்கு வல்லவன் பிறப்பான்.


Mr Krish Tamilnadu
செப் 20, 2025 17:04

மின் வெட்டு நாளில் மின்சாரம் போல வந்தேன்...அந்த பயம், அந்த பயம் பிடித்து இருக்கு. இத்தனை வருட கட்சி, எத்தனை முறை ஆட்சி, சட்டமன்றம் பாராளுமன்றம் எல்லாம் பார்த்து இருந்தும், என்னோடு மக்கள் சந்திப்பையே தாங்கி கொள்ள முடியாலேயே. அந்த பயம். ப்பூ... எப்படி ஜெயிப்பேன்கிற சஸ்பென்ஸ் உடன் இரு.


Senthoora
செப் 20, 2025 16:43

தம்பி, உங்க டீம பார்த்து அண்ணாதிமுகாவுக்கோ, பாஜாகாவுக்கோ, திமுகாவுக்கோ ஒரு சலமும் இல்லை, இது உங்களுக்கு நீங்களே போடும் ட்ராமா என்று மக்களுக்கு தெரியுமுங்கோ.


Venkatesan Ramasamay
செப் 20, 2025 16:01

அரியணை ஏறியதும் முதல் கையெழுத்து ... சீமானுக்கு சங்குமலைதான்..


panneer selvam
செப் 20, 2025 15:55

Vijay ji , leave aside the problems with DMK , if you become a CM what you will do for Tamilnadu , for an example Rameswaram fishermen Vs Sri Lankan Tamil fishermen issue ? Are you going to occupy Sri Lanka by your young fans ?


Vasan
செப் 20, 2025 19:28

He will write letter to Sri Lanka Prime Minister, instead of simply writing to India Prime Minister.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை