உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் மோதி இளைஞர் பலி: நிற்காமல் சென்ற நடிகை கைது

கார் மோதி இளைஞர் பலி: நிற்காமல் சென்ற நடிகை கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: அசாமில், அதிவேகமாக காரை ஓட்டி, 21 வயது இளைஞர் உயிரிழப்புக்கு காரணமான நடிகை நந்தினி காஷ்யபை, போலீசார் நேற்று கைது செய்தனர். வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்தவர் சாமுவேல், 21. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள கல்லுாரியில் படித்து வந்தார். இதுதவிர, குவஹாத்தி நகராட்சி அலுவலகத்தில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். கடந்த 25ம் தேதி அதிகாலை, குவஹாத்தியின் பிரதான சாலையில் அங்குள்ள தெரு விளக்குகளை பழுதுபார்க்கும் பணியில் சாமுவேல் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக 120 கி.மீ., வேகத்தில் சென்ற, 'ஸ்கார்பியோ' கார், சாமுவேல் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற காரை, அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்றனர். கஹிலிபாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்ற அக்காரில் இருந்து, அசாமி திரைப்பட நடிகை நந்தினி காஷ்யப் இறங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நந்தினி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, காயமடைந்த இளைஞரின் மருத்துவ செலவை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகை தெரிவித்தார். இதையடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். எனினும், நந்தினி காஷ்யப் அளித்த வாக்குறுதிப்படி மருத்துவ செலவை அவர் அளிக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சாமுவேல், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நடிகை நந்தினி விபத்து ஏற்படுத்தியதை உறுதி செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N.Purushothaman
ஜூலை 31, 2025 06:41

இந்தியாவின் கூத்தாடிகள் அரசியல்வியாதிகளை விட ஆபத்தானவர்கள் ...போதை மருந்து பரிசோதனை செய்து பாருங்கள் ... இன்னும் நிறைய விஷயம் வெளியே வரும் ...


Padmasridharan
ஜூலை 31, 2025 05:49

இங்கேயும் நடிகர் விக்ரமனின் மகன் இவ்வாறு செய்தார். அரசியல்வாதியின் மகள் நடைபாதையில் காரை ஏற்றி மதுவில் படுத்துக்கிடந்த இளைஞரை கொன்றார். காருக்கு இருக்கும் மரியாதை பாதசாரிகளுக்கு இல்லை சாமி. நிறைய இடங்களில் நடைபாதையே இல்லை. எல்லாம் வண்டிகள் மையம். அரசும் வண்டிகளுக்கு பாலங்கள் கட்டுகின்றனவே தவிர நடப்பவர்களுக்கு நடைபாதையின் மரியாதையை இல்லாமல் செய்துவிட்டது வண்டிகளின் ஆக்கிரமிப்பால்


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2025 01:59

தினமும் ஆயிரம் பேர் இந்தியாவில் கார் மோதி இறக்கிறார்கள். இவர் நடிகை என்பதால், பழிவாங்கப்படுகிறார். தமிழகத்தில் ஒரு பிரபல மைனாரிட்டி சாப்பாடு ரெவியூ யு டுபேர் ஒரு அப்பாவி இளைஞரை விபத்துக்குள்ளாகி, திமுக உதவியால் தப்பி விட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை