உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துறவறம் பூண்ட நடிகை மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்கம்: அகாரா நிறுவனர் அதிரடி

துறவறம் பூண்ட நடிகை மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்கம்: அகாரா நிறுவனர் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளார்.பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, இந்திய மொழி படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், நாயகியாகவும் நடித்தவர். தமிழில், ஷோபா சந்திரசேகரன் இயக்கிய நண்பர்கள் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில், போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். போலீஸ் விசாரணைக்கு வராமல், வெளிநாடுகளில் தலைமறைவாகவும் இருந்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன் நாடு திரும்பிய அவர், தற்போது நடந்து வரும் கும்பமேளாவுக்கு சென்றார். அங்கு துறவறம் பூண்டதாகவும், தன் பெயரை மாய் நந்த் கிரி என்று பெயர் மாற்றிக்கொண்டதாகவும் அறிவிப்பு வெளியானது. அவரை, கின்னர் அகாரா என்ற அமைப்பின் மகா மண்டலேஸ்வர் ஆக நியமித்துள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியானது. இது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும், அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கூட, தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். 'உலக இன்பத்தை எல்லாம் அனுபவித்தவர்கள், ஒரே நாளில் துறவி ஆகி விடுகின்றனர்' என்று விமர்சனம் செய்திருந்தார்.இந்நிலையில், கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: எனக்குத் தெரியாமல், மகா மண்டலேஸ்வர் லஷ்மி நாராயண் திரிபாதி, இந்த வேலையை செய்து விட்டார். அவரை அகாராவில் இருந்து நீக்குகிறேன். மம்தா குல்கர்னியையும் மகா மண்டலேஸ்வர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஜன 31, 2025 18:36

ஆணும் பெண்ணும் சமமல்லன்னு பேசினதுக்கு அப்பிடி உருட்டுனாங்களே...


கோமாளி
ஜன 31, 2025 17:28

அரே கார்பரேட் பாபா.. உலக இன்பத்தை அனுபவித்து முடித்தவனுக்கு தான் துறவு விரைவாகும்.


என்றும் இந்தியன்
ஜன 31, 2025 17:21

இப்போ இவள் தனியாக ஒரு ஆசிரமம் அமைத்து அதில் ஒரு பெரிய துறவி போல ஆளுமை செய்யப்போகின்றாள் இன்னும் 6 மாதத்தில்


அப்பாவி
ஜன 31, 2025 16:53

பாக்கவே பயங்கரமா இருக்காரு அதான்.


Sivagiri
ஜன 31, 2025 14:29

ஓகே ஓகே . .


Barakat Ali
ஜன 31, 2025 14:13

எதை வைத்து பதவி கொடுத்தார்கள் ???? பிறகு எதை வைத்து பதவியைப் பறித்தார்கள் ????


SUBRAMANIAN P
ஜன 31, 2025 13:41

இந்தம்மா செமத்தியா அந்த திரிபாதியை கவனிச்சிருப்பாங்க போல..


Barakat Ali
ஜன 31, 2025 14:13

கவனிக்க என்ன மிச்சம் இருக்கப்போகிறது ????


புதிய வீடியோ