உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; சி.பி.ஐ., வசம் ஒப்படைப்பு

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; சி.பி.ஐ., வசம் ஒப்படைப்பு

புதுடில்லி: நடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்தவர் ரன்யா ராவ், 34; நடிகை. கன்னடத்தில் இரண்டு, தமிழில் ஒரு படம் நடித்துள்ளார். கர்நாடக போலீஸ் குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி கழக ஏ.டி.ஜி.பி., ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள். இவர், கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.80 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தார். அவரை, விமான நிலையத்தில், டில்லி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.இவர், தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி கடத்தியதும் அம்பலமானது. அவரிடம் இருந்து மொத்தம் 17.29 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நடிகை ரன்யா ராவுக்கு தேச விரோத சக்திகளுடன் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணையை சி.பி.ஐ., அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். சி.பி.ஐ., அதிகாரிகள் குழு மும்பை மற்றும் பெங்களூரு விமான நிலையத்தில் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Srprd
மார் 08, 2025 23:39

As usual the case will be forgotten after some time just like Jaffer Sadiq. The politicians behind him are still roaming around.


Barakat Ali
மார் 08, 2025 16:06

சில நடிகைகளுக்கு மட்டும் சட்டத்தின் பிடியில் இருந்து விதிவிலக்கு உண்டும்மா .... பிஜேபில சேரலைன்னா உனக்கு அந்தக் கொடுப்பினை இல்ல .....


N Sasikumar Yadhav
மார் 08, 2025 16:44

விதிவிலக்கு பாஜகவில் சேருவதில் இல்லை . ஒரு குறிப்பிட்ட மதமாக இருந்தால் குண்டு வெடிப்பைக்கூட சிலிண்டர் வெடிப்பு குக்கர் வெடிப்புனு தமிழக திராவிட மாடல் கட்சிக்காரனுங்க சொல்வானுங்க


Barakat Ali
மார் 08, 2025 19:12

காஜல் அகர்வால் மற்றும் தமன்னா பாட்டியா மீதான விசாரணை, நடவடிக்கை என்ன ஆச்சு ???? கோவை நிறுவன க்ரிப்டோகரன்சி விவகாரம் .....


Petchi Muthu
மார் 08, 2025 15:59

சட்ட விரோதமாக தங்கம் கொடுத்து வருவது செய்யப்பட்டால் நடிகை இது கடும் நடவடிக்கை தேவை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை