உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னை ஐகோர்ட்டுக்கு 5 நிரந்தர நீதிபதிகள்; ஜனாதிபதி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டுக்கு 5 நிரந்தர நீதிபதிகள்; ஜனாதிபதி உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, தமிழக கவர்னரும், முதல்வரும் ஒப்புதல் அளித்திருந்தனர். அதை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நீதிபதிகளை நியமித்து, அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.அதன்படி நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரம்: விக்டோரியா கவுரி பி.பி. பாலாஜி கே.கே. ராமகிருஷ்ணன் ஆர். கலைமதி கே.ஜி. திலகவதி 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளதால் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
செப் 21, 2024 07:20

திராவிட ஆதரவு நீதிபதிகளை சற்று கவனிக்க வேண்டும். இல்லை என்றால் நீதித்துறைக்கு களங்கம் வந்து சேரும்.


கிஜன்
செப் 20, 2024 23:29

இதில் சமூக நீதிப்படி வந்தவர்கள் எத்தனை பேர் .... சமூக அநீதிப்படி வந்தவர்கள் எத்தனை பேர் .... என்று அறிவிக்கவில்லை என்றால் ...குழப்பம் வருமே ...


முக்கிய வீடியோ