உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதைபொருள் கட்டுப்பாடு ஏஜென்சி அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

போதைபொருள் கட்டுப்பாடு ஏஜென்சி அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

புதுடில்லி: போதைப் பொருள் கட்டுப்பாடு ஏஜென்சியின் (என்சிபி) வட கிழக்கு மாநிலங்களுக்கான துணை இயக்குநர் ஜெனரலாக உள்ள சுதாகர், சென்னையின் என்சிபி துணை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.2003-ம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஆர். சுதாகருக்கு, தெற்கு மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் பதவியை வகிக்க முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.சுதாகர், தற்போது அசாம் மாநிலம் குவஹாத்தியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் வடகிழக்கு பிராந்திய டிடிஜியாக உள்ளார். இவர் தமிழகத்தில் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் மற்றும் கோவை மேற்கு மண்டல ஐஜி உட்பட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார்.என்சிபியின் புதிய பணியில், அவர் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் அதிகார வரம்பைக் கொண்டிருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KOVAIKARAN
அக் 14, 2025 17:46

போதைப் பொருள் கட்டுப்பாடு ஏஜென்சியின் என்சிபி வட கிழக்கு மாநிலங்களுக்கான துணை இயக்குநர் ஜெனரலாக உள்ள சுதாகர், கிழக்கு மாநிலங்களில், குறிப்பாக மணிப்பூரில் போதை பொருட்களை பெருவாரியாக கட்டுப்படுத்தியுள்ளார். மணிப்பூரில் ஓரளவு அமைதி திரும்பியதற்கு இவரும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. நமது தமிழக மாநிலம் தற்போது போதை பொருள்களின் மையமாக செயல்படுகிறது என்று மத்திய அரசு கருதுவதால், அவற்றைக் கட்டுப்படுத்த சென்னையின் என்சிபி துணை இயக்குநர் பொறுப்பையும் சுதாகர் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது, என்று எண்ணத்தோன்றுகிறது. இங்கே உள்ள அதிகாரிகள் ஊழல் ஆட்சிக்கு துணைபோவதால், இந்த ஏற்பாடு என்று ஆகி இருக்கலாம்.


Rajan A
அக் 14, 2025 16:52

அப்படியே ஒரு சுற்று தமிழ்நாடு வரவும்


சமீபத்திய செய்தி