உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கால்காஜி கோவிலில் கூடுதல் பாதுகாப்பு

கால்காஜி கோவிலில் கூடுதல் பாதுகாப்பு

கால்காஜி:தென்கிழக்கு டில்லியின் கால்காஜி கோவிலில் கடந்த மாதம் 29ம் தேதி இரவு கோவில் முன்னால் ஒரு கும்பல் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கோவில் பூசாரி யோகேந்திர சிங்கை அந்த கும்பல் அடித்துக் கொன்றது. இந்த கொலை தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். தசரா பண்டிகை நெருங்கி வரும் வேளையில், பூசாரி கொலை செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பொதுமக்களும் பக்தர்களும் கவலை அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கோவிலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திலும் அதைச் சுற்றியும் பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்க அந்த பகுதி முழுவதும் போலீசார் ரோந்து செல்கின்றனர். போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை