உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தவளையை காத்த நாகத்தை பார்த்து தெய்வீகத்தை உணர்ந்த ஆதிசங்கரர்

தவளையை காத்த நாகத்தை பார்த்து தெய்வீகத்தை உணர்ந்த ஆதிசங்கரர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிட்டத்தட்ட 1,200 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலத்தில் பூர்ணா நதிக்கரையில் காலடி எனும் அழகிய கிராமத்தில் வாழ்ந்து வந்த நம்பூதரி பிராமண தம்பதியான சிவகுரு - ஆர்யாம்பாள் ஆகியோருக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமே இல்லாதிருந்ததால் அவர்கள் கடும் விரதம் பூண்டு, சிவபெருமானை துாய்மையான பக்தியுடன் ஆராதித்து வந்தனர்.அதனால் மகிழ்ச்சியடைந்த கருணாமூர்த்தியான பரமேஸ்வரன், அவர்களுக்கு தம் அம்சத்துடன் கூடிய ஓர்ஆண் குழந்தையை அருளினார். அக்குழந்தைக்கு சங்கரன் எனப் பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வந்தனர். ஐந்து வயதில் உபநயனம் செய்து வைத்தனர். அதன்பின், ஸ்ரீ சங்கரரின் அபார சக்திகள் வெளிப்பட துவங்கினஒரு நாள், தாம் பிக்ைஷ கேட்ட ஒரு வீட்டில் வறுமை தாண்டவமாடியபோதிலும், அந்த வீட்டு பெண்மணி தன்னிடம் பிக்ைஷ கேட்டு வந்த பிரம்மச்சாரியை ஏமாற்ற மனமில்லாமல், வீடு முழுதும் தேடி உலர்ந்த ஒரு நெல்லிக்கனியை கண்டெடுத்து, அதை ஸ்ரீ சங்கரருக்கு பிக்ைஷ அளித்தாள் அந்த ஏழ்மை நிலையிலும் அவளுக்கிருந்த உயர்ந்த மனப்பாங்கு ஸ்ரீசங்கரரின் இதயத்தை பெரிதும் தொட்டது. அக்கணத்திலேயே அவர் ஸ்ரீ மஹாலக் ஷ் மியை வேண்டிக்கொள்ள, அப்பெண்மணியின் வீட்டில் தங்கநெல்லிக்கனிகள் மழையென பெய்தனபின் ஒருமுறை, தம் தாயார் ஆர்யாம்பாள் பூர்ணா நதியில் தினப்படி நீராடி சென்றுவருவதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்காததைக் கண்டஸ்ரீ சங்கரர், கங்காதேவியை பிரார்த்திக்க, பூர்ணா நதியே தன் ஓட்டத்தை ஸ்ரீசங்கரரின் இல்லத்திற்கு பின்னால் இருக்குமாறு மாற்றிக் கொண்டு விட்ட அதிசயம் நடந்ததுஎட்டு வயதிற்குள்ளாகவே நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்து விட்ட ஸ்ரீ சங்கரரின் பெருமை எங்கும் பரவத் துவங்கியது. அப்பிரதேசத்தை ஆண்ட மன்னரே ஸ்ரீ சங்கரரை நேரில் வந்து தரிசித்து சென்றார்தம் பிறவியின் நோக்கம் நிறைவேறும் பொருட்டு, தம் தாயாரின் அனுமதியுடன் துறவறம் ஏற்ற ஸ்ரீ சங்கரர், நர்மதை நதிக்கரையில் வாழ்ந்து வந்த மஹானாகிய ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரை தம் குருவாக ஏற்று அவருக்கு சேவை புரிந்து வந்தார்தம் குருநாதரின் ஆணையை ஏற்று காசிக்கு சென்ற ஸ்ரீசங்கரர், பல்வேறு மதத்தினரையும் தம் வாதத் திறமையால் வென்று'உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சங்களே' எனும் அத்வைத மதமே பரம்பொருளை பூரணமாக அறிய உதவும் மதம் என்பதை நிலைநாட்டினார்உபநிஷதங்கள், பகவத்கீதை, வியாச முனிவரின் பிரம்ம சூத்திரங்கள், விஷ்ணு ஸஹஸ்ர நாமம், பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரங்கள் போன்ற பெரும் தெய்வீக படைப்புகளின் உட்பொருளை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் விவேக சூடாமணி, ஆத்மபோதம், சதச்லோகீ போன்ற பற்பல கிரந்தங்களையும், பக்தி மார்க்கத்தை விரும்புவோருக்கு உதவும் வகையில், பக்தி ரசம் ததும்பும் நுாற்றுக்கணக்கான ஸ்லோகங்களையும் ஸ்ரீ சங்கரர் அருளினார்வேதங்களை சார்ந்து பரம்பொருளை அறிவிக்கும் மார்க்கங்களாக அத்வைதம், யோகம், சாங்க்யம் முதலான ஷட்தர்சனங்கள் எனப்படும் ஆறு மார்க்கங்களை நிர்ணயித்தார் பஞ்சாயதனம் எனப்படும் சிவன், அம்பாள், விஷ்ணு முதலான ஐந்து கடவுளர்களை ஒருசேர வழிபடும் பூஜை முறையை ஏற்படுத்தினார். சைவம், வைணவம், சாக்தம் முதலான ஆறு ஆதாரப்பூர்வமான மதங்களை அறிவித்தார்காஷ்மீரில் பற்பல பெரும் பண்டிதர்களை வாதத்தில் வென்று, புகழ் பெற்ற சர்வஜ்ஞ பீடத்தில் அமர்ந்தார்இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு பீடங்களை தோற்றுவித்தார். அவரால் முதலில் தோற்றுவிக்கப்பட்ட பீடமே தென் திசையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடமாகும். இதர பீடங்கள் புரி - கிழக்கு, பத்ரி - வடக்கு மற்றும் துவாரகா - மேற்கு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன ஒரு நாள் தம் சீடர்கள் பின் தொடர, துங்கா நதிக்கரையில் ஸ்ரீ சங்கரர் வந்து கொண்டிருந்த சமயம் அங்கு தென்பட்ட ஒரு காட்சி, அவரை பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. வெயிலில் பிரசவ வலியால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த தவளைக்கு, நாகம் ஒன்று தன் படத்தை விரித்து நிழலை தந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட ஸ்ரீ சங்கரர், 'இயற்கையிலேயே நாகத்திற்கு தவளை உணவாகும்.ஆயினும், இங்கோ தன் இரையான தவளையைஇரையென காணாது, அதன் இன்னலுக்கு இரங்கி அதற்கு உதவ ஒரு நாகம் முற்படுகிறதென்றால், இந்த மண்ணின் மகிமை தான் என்னே!' என எண்ணினார். மறுகணமே, 'என் முதலாவது பீடத்தை அமைக்க இந்த புண்ணியம் நிறைந்த தலமே மிக பொருத்தமான இடம்' என உறுதிபூண்டார். பின் அங்கிருந்த பாறையின் மேல் அம்பாளின் எந்திரமான, ஸ்ரீ சக்கரத்தை வரைந்தார்.அதன்பின் அவர் ஸ்ரீ சரஸ்வதி தேவியை தியானம் செய்தார். தேவியும் உடனே காட்சி தந்தாள்.'தாயே... ஸ்ரீ சாரதை எனும் பெயரில் நீ இவ்விடத்தில் நிரந்தரமாக குடிகொண்டுபக்த ஜனங்களுக்கு அருள்புரிந்து வர வேண்டும்' என சங்கரர் பிரார்த்தித்தார். தேவியும், மகிழ்வுடன் அவரின் பிரார்த்தனைக்கு சம்மதித்தார். ஸ்ரீ சாரதையை பிரதான தெய்வமாக கொண்டு அன்றைய தினம் அவரால் தோற்றுவிக்கப்பட்ட பீடம், ஸ்ரீ சாரதா பீடம் என்றே அழைக்கப்பட்டு வரத் துவங்கியது ஸ்ரீ சாரதா பீடத்திற்கு பிரதான வேதமாக யஜுர் வேதத்தை அறிவித்தார், ஸ்ரீ சங்கரர். கைலாசத்திலிருந்து தருவிக்கப்பெற்ற ஸ்ரீ சந்திரமவுலீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும், ஸ்ரீ ரத்னகர்ப கணபதி விக்ரஹத்தையும் மற்றும் மஹாமேரு எந்திரத்தையும் பீடத்தின் நித்ய பூஜைக்கென ஸ்ரீ சங்கரர் அளித்தார்ஸ்ரீ சாரதா பீடத்தின் நிர்வாகத்தை தம் முக்கிய சீடரும் சாட்சாத் நான்முக பிரம்ம தேவனின் அவதாரமாகவே கருதப்பட்டஸ்ரீ சுரேஸ்வராசார்யாரிடம் ஸ்ரீ சங்கரர் ஒப்படைத்தார்தம், 32 வயதில் இமயமலையில் உள்ள கேதார்நாத் திருத்தலத்தை அடைந்து, சிவபெருமானை வழிபட்டு பின், பனிபடர்ந்த மலைகளூடே சென்று மறைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K.aravindhan aravindhan
அக் 29, 2024 09:25

2400 வருடங்கள்.


Subash BV
அக் 28, 2024 19:50

Congrats. Co continue. Put Hinduism first.


Subramanian Vaidyanathan
அக் 27, 2024 17:03

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர


Sainathan Veeraraghavan
அக் 27, 2024 16:30

பகவான் ஆதி சங்கர பகவத் பாதாள் திருவடிகளே சரணம். பகவான் இவுலகில் இவுலகில் உள்ள எல்லோரையும் ரக்ஷிக்க பிரார்த்திக்கிறேன். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர


Ramesh Sargam
அக் 27, 2024 12:26

சங்கரம் போற்றி. சங்கராச்சார்யம் போற்றி.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 27, 2024 12:13

சங்கரர் வழங்கிய அத்வைதம் - இத்தனை உயிரினங்களாகவும் ஆனவன் இறைவன் ஒருவனே என்ற தத்துவம் - சரியான தத்துவம் என்று அதில் பயணித்த ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லியிருக்கிறார் .....


rasaa
அக் 27, 2024 11:40

மிக மிக அருமை. இக்கால இளைஞர்களுக்கு இது சென்று சேர வேண்டும்.


Bala
அக் 27, 2024 09:41

எளிமையான தமிழில் அமைந்த இந்த உரை அருமை. ஆதிசங்கரர் அனைவருக்கும் ஆனவர், ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் அல்ல என்று சிலருக்கு புரிய வைக்க, இது போன்ற நிகழ்வகளை மக்களுக்கு புரியும் எளிய தமிழில் தினமலர் வழங்க வேண்டும்


sankaran
அக் 27, 2024 18:37

சங்கரர் ப்ராமணரகளுக்கு மட்டும் என்று அத்வைதம் சொல்ல வில்லை ...ப்ராமணரகளும் சங்கரரை தங்கள் ஜாதி என்று மற்ற ஜாதியினர் தங்கள் ஜாதி தலைவர்களை கொண்டாடுவது போல் கொண்டாடுவது இல்லை ... ஜாதி ரீதியில் நீங்கள் பார்த்தால் அது உங்கள் கண்ணில் உள்ள கோளாறு அல்லது திராவிடத்தின் எபெக்ட் ...


SChithra Sakkaravarthy
அக் 27, 2024 08:08

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ?


R Dhasarathan
அக் 27, 2024 07:12

ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா


சமீபத்திய செய்தி