உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாய கைதிகள்

விவசாய கைதிகள்

சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மண்டோலி சிறைச்சாலை வளாகத்தில், பயன்படுத்தப்படாத 1.5 ஏக்கர் நிலம், 'சஷக்த் க்ருஷி' திட்டத்தின் கீழ் தோட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கைதிகளின் உழைப்பில் விளைந்த 310 கிலோ பழங்கள் மற்றும் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. உடல் தகுதி, விருப்பம் மற்றும் நல்ல நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கைதிகளுக்கு விவசாயப் பணி வழங்கப்பட்டுள்ளது. பணியமர்த்துகிறது.தோட்டக்கலை நிபுணர்கள் மற்றும் வேளாண் துறையுடன் ஆலோசித்து, பருவகால பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.சுரைக்காய், வெள்ளரி, வெண்டைக்காய், பாகற்காய் போன்ற காய்கறிகள் மற்றும் சீதாப்பழம், முலாம்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.சிறைச்சாலையின் சமையலறைக்கு தேவையான புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவையும் இங்கு பயிரிடப்பட்டுள்ளன. சமையலறையின் 150 கிலோ கழிவுகள் இந்த விவசாய நிலத்துக்கு உரமாகவும் மாற்றப்பட்டுள்ளது.அடுத்தகட்டமாக கொய்யா, எலுமிச்சை மற்றும் மாமரம் ஆகிய கன்றுகள் நட்டு பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ