உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிங்கப்பூர்-சென்னை விமானம் கடைசி நேரத்தில் திடீர் ரத்து: தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் அவதி

சிங்கப்பூர்-சென்னை விமானம் கடைசி நேரத்தில் திடீர் ரத்து: தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சிங்கப்பூர்-சென்னை ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு AI 349 விமானம் புறப்பட தயாராக இருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் புறப்படும் சிறிதுநேரத்துக்கு முன்பாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பயணம் ரத்து செய்யப்பட்டது.இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், விமானத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை சரி செய்ய கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. எனவே திட்டமிடப்பட்ட விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.பயணிகளை விரைவில் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கான தங்குமிடம் வழங்கப்படும். எதிர்பாராத இந்த சிரமத்தை குறைக்க சிங்கப்பூரில் உள்ள விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஆக 04, 2025 15:34

கல்யாண விருந்துக்கு முன்னாடியே மொய் வாங்கிட்டு, இலையப் போட்டு உக்கார வெச்சு எழுந்துப் போங்கடான்னு பங்காளின்னு விரட்டின மாதிரி இருக்கு இவிங்க சேவை. நாமதான் வல்லரசு. மானமே இல்லாம சி.இ.ஓ பதவில ஒரு ஃபாரினர் வேற இருக்காரு.


Jegathesan Shanmuga Sundaram
ஆக 04, 2025 05:24

நல்ல ஆலோசனை நண்பரே


Kasimani Baskaran
ஆக 04, 2025 04:04

கோவிட் கால பராமரிப்பு மற்றும் தொழில் முடக்கம் பல விமான நிறுவனங்களை வெகுவாக பாதித்து இருந்தது. இன்று அது கண்கூடாக தெரிகிறது.


Venkataraman
ஆக 03, 2025 23:07

ஏர் இந்தியாவின் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. மக்கள் இதனுடைய விமானங்களில் பயணிக்க பயப்படுகிறார்கள். சரியான நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுவதில்லை. விமானங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது, விபத்துக்குள்ளாகிறது, அல்லது கேன்சல் செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகிறார்கள். இது தொடர்ந்தால் இந்த நிறுவனம் மூடப்பட்டு விடும்.


Ramesh Sargam
ஆக 03, 2025 21:14

இனி Air India என்கிற பெயரை மாற்றி, விமானம் எப்பொழுதும் பூமியிலேயே இருப்பதால் Earth India என்று அழைக்கலாம்.


பிரேம்ஜி
ஆக 03, 2025 21:36

எர்த் இண்டியா - நல்ல பெயர்!


Santhakumar Srinivasalu
ஆக 03, 2025 21:08

ஏர் இந்தியாவுக்கு என்ன ஆச்சு?


சமீபத்திய செய்தி