உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.ஐ., காரணமாக 20 லட்சம் பேர் வேலை பறிபோகக் கூடும்; நிடி ஆயோக் அறிக்கையில் தகவல்

ஏ.ஐ., காரணமாக 20 லட்சம் பேர் வேலை பறிபோகக் கூடும்; நிடி ஆயோக் அறிக்கையில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,:ஏ.ஐ., தாக்கம் காரணமாக, இந்தியாவில் ஐ.டி., துறையில் பணிபுரியும் 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோக வாய்ப்புள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் தற்போது ஐ.டி., துறையில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஏ.ஐ., தாக்கத்தால், 20 லட்சம் வேலைகள் பறிபோகக்கூடும். எனினும், பணிபுரிவோர் ஏ.ஐ., தொடர்பான படிப்புகளை கற்றுக்கொள்வதால், அடுத்த 5 ஆண்டுகளில், புதிதாக 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏ.ஐ., குறித்த பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பவர்களே வேலையை இழக்க நேரிடும்.இது வெறும் 20 லட்சம் பேர் வேலை இழப்பு சம்பந்தப்பட்டது மட்டுமின்றி; 2 - 3 கோடி பேரின் வருமானத்துடன் தொடர்புடையது ஆகும். எனவே, தனிநபர்கள் ஏ.ஐ., தொடர்பான பயிற்சியில் இணைந்து, தங்கள் சூழலுக்கு ஏற்ப திறமையை தகவலமைத்து கொள்வது அவசியம்.நம் நாட்டுக்கு அதன் மக்கள்தான் உண்மையான பலம். உலகில் அதிக எண்ணிக்கையிலான இளம் டிஜிட்டல் திறமையாளர்கள் இந்தியாவில் தான் உள்ளனர்.ஏ.ஐ., காரணமாக வரப்போகும் மாற்றங்களை சாதகமான வாய்ப்புகளாக மாற்ற, தேசிய ஏ.ஐ., திறமை இயக்கம் என்ற பெயரில் நாடு தழுவிய கூட்டு முயற்சியை துவங்க வேண்டும். இந்தியாவை உலகிலேயே அதிக ஏ.ஐ., நிபுணர்களை கொண்ட நாடாக உருவாக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.

சத்தமின்றி பணிநீக்கம்

டி.சி.எஸ்., நிறுவனம், மொத்தமுள்ள 6 லட்சம் பணியாளர்களில், 2 சதவீதம் அதாவது 12,000 பேரை வரும் 2026, மார்ச் மாதத்துக்குள் பணிநீக்கம் செய்யப் போவதாக, கடந்த ஜூலையில் அறிவித்திருந்தது. மேலும், பெரிய, நடுத்தர ஐ.டி., நிறுவனங்கள், சத்தமின்றி வேலையை விட்டு சென்று, வேறு வேலையை கண்டறியுமாறு பணியாளர்களை நிர்ப்பந்தித்து வருகின்றன. கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 25,000 பேர் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை, இந்தாண்டு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

jeyakumar
அக் 13, 2025 18:41

அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஏஐ உதவியுடன் விரைவில் மாற்ற வேண்டும், ஓட்டு முறையை ஒழிக்க வேண்டும்,MLA, MP இல்லாத நிலையை அடைய வேண்டும்,


Natchimuthu Chithiraisamy
அக் 13, 2025 11:19

நல்ல கண்டுபிடிப்பு விவசாயம் காக்க நல்ல வாய்ப்பு.


Ramesh Sargam
அக் 13, 2025 10:33

இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை மத்திய அமைச்சரவை, மாநிலங்களில் உள்ள அமைச்சரவைகளில் அறிமுகப்படுத்தினால், நாம ஒரு சில மந்திரிகளை வைத்து அரசை நடத்தமுடியாதா? அப்படி செய்வதால் அதிகமாக உள்ள ஒன்றுக்கும் உதவாத அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பி, அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் மிச்சப்படுத்தலாம். அவற்றை மக்கள் நலத்திட்டத்திற்கு பயன்படுத்தலாம்.


அப்பாவி
அக் 13, 2025 09:25

அதனால் என்ன? ரெண்டு கோடி வேலைல ஒண்ணு கெடைக்காதா?


திருட்டு திமுக கைக்கூலி கொத்தடிமை
அக் 13, 2025 08:34

கொத்தடிமைகளுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. 200ரூ பணம், ஓசி பிரியாணி மற்றும் கூவாட்டர் இது போதும் அதுங்க காலத்தை கழிக்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை