உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு!

பிரதமர் மோடியுடன் விமானப்படை தலைமை தளபதி சந்திப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.அதே நேரத்தில், பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கிலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது.இந்நிலையில், இன்று (மே 04) விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, விமானப்படை தலைமை தளபதி உடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

guna
மே 04, 2025 21:25

TRE ஒரு புறம் போக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்


TRE
மே 04, 2025 19:10

விடிந்தால் பாகிஸ்தான் இருக்காது கண் சிவந்த நரேன். இரவோடு இரவாக இந்தியா ராணுவம் அச்சத்தில் பாகிஸ்தான் மக்கள் மிரண்டு பார்த்த உலக நாடுகள் கை கோர்த்த அமெரிக்கா , இஸ்ரேல் வாய் கோர்த்த சங்கிகள்.


vivek
மே 04, 2025 21:32

TRE. பாக்கி நாட்டின் ஷூ நக்கியோ


TRE
மே 04, 2025 17:16

இந்தியாவில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எக்ஸ் கணக்கு முடக்கம்


TRE
மே 04, 2025 17:05

கடைசி வரை பிரதமர் எந்த தாக்குதலும் நடத்தமாட்டார்.பாகிஸ்தான் கிரிக்கெட் பிளேயர்ஸ் கணக்கை முடக்கிவிட்டாச்சு இல்ல


naranam
மே 04, 2025 15:36

சீக்கிரம் போடுங்க ஸார்! ஒரு தீவிரவாதி கூட அங்க மிஞ்சக் கூடாது.


சித்தறஞ்சன்
மே 04, 2025 15:06

கபில் சிபல் போன்ற மனித உரிமை கும்பல்கள் , வழக்கு போடுவார்கள் . உடனே உச்ச நீதிமன்றமும் , தடை அது இது என கிளம்பிவிடும்.


ஆரூர் ரங்
மே 04, 2025 13:49

எந்தப் படையை அனுப்பினாலும் பலன் கிடைப்பது சந்தேகம். அங்கு ஆட்சிக்கு மிகப்பெரிய இடையூறு நீதித்துறைதான். நம்ம ஊரு கோலிஜியத்தை அனுப்பி நல்ல ஆலோசனை கூறச்சொல்லலாம்.


சமீபத்திய செய்தி