உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து; இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து; இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து 70 பயணிகளுடன் மதுரைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில், பயணிகள் 241 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, டாடா குழுமத்திற்குச் சொந்தமான விமான நிறுவனத்தில் தொடர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yeifv45e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒரே நபர் மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார். இந்த சூழலில், பராமரிப்பு பணி காரணமாக 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 4 சர்வதேச மற்றும் 4 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: 1. துபாயிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானம் (AI906)2. டில்லியிலிருந்து மெல்போர்னுக்கு செல்லும் விமானம் ( AI308)3. மெல்போர்னிலிருந்து டில்லிக்கு செல்லும் விமானம் (AI309)4. துபாயிலிருந்து ஐதராபாத்திற்கு செல்லும் விமானம் (AI2204)5.புனேவில் இருந்து டில்லிக்கு செல்லும் விமானம் (AI874)6. ஆமதாபாத்தில் இருந்து டில்லிக்கு செல்லும் விமானம் (AI456)7. ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானம் (AI2872)8.சென்னையில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானம் (AI571) ஆகிய 8 விமானங்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். எங்களது ஊழியர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவசர தரையிறக்கம்

சென்னையில் இருந்து 70 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறை விமானி கண்டுபிடித்தார். தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து விமானி எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

theruvasagan
ஜூன் 20, 2025 14:45

டிமாண்டு அதிகமானால் அநியாயத்துக்கு டிக்கட் விலையை வானளவு ஏற்றி மனசாட்சி இல்லாமல் மக்களை சுரண்டினவர்களை தெய்வம் சும்மா விடுமா. உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்.


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 20, 2025 12:15

இதுவரை ஒரு விமானம் போலும் கான்செல் ஆகாமல் நடைபெற்ற விமானசேவை அஹமதாபாத் விமான விபத்திற்கு பிறகு விமான சேவை தாறுமாறாகிவிட்டது, தினசரி விமான சேவை ரத்து, அவசர தரை இறக்கம், நம்பிக்கையுடன் விமான பயணம் செய்ய முடியாத சூழ்நிலை


RAVINDRAN.G
ஜூன் 20, 2025 12:08

இனிமேல் விமான பயணம் என்றாலே பயமா இருக்கு. வந்தே பாரத் ட்ரைனைவிட கொஞ்சம் ரேட் கூட ஆனாலும் விமானம் சீக்கிரமா போயிடும்னு பிளான் பண்ணினால் உயிருக்கே ஆபத்தாய் முடியும் போல இருக்குதே. இந்த வருஷம் விமான பயணம் செய்ய சற்று யோசிக்கனும்போல


அப்பாவி
ஜூன் 20, 2025 12:02

ஆள் குறைப்பு, ஆள் குறைப்புன்னு செஞ்சு எல்லாமே ஆட்டமேட்டிக். ஓடுதளத்தில் கிளம்புற வரைக்கும் நல்லா இருந்த விமானம் , 15 செகண்டில் துருப்பிடிச்சு ரிப்பேராயி கீழே விழுந்திடிச்சாம்.


Ramesh Sargam
ஜூன் 20, 2025 12:02

ஆக இவ்வளவு நாட்களாக பராமரிப்பு எதுவும் செய்யாமல், வெறும் எரிபொருளை நிரப்பிக்கொண்டுதான் இந்த விமானங்கள் பறந்திருக்கின்றன. அடப்பாவிகளா மக்கள் உயிர் உங்களுக்கு அவ்வளவு அலட்சியம்.


Ramesh Sargam
ஜூன் 20, 2025 12:01

ஆக இவ்வளவு நாட்களாக பராமரிப்பு எதுவும் செய்யாமல், வெறும் எரிபொருளை நிரப்பிக்கொண்டுதான் இந்த விமானங்கள் பறந்திருக்கின்றன. அடப்பாவிகளா மக்கள் உயிர் உங்களுக்கு அவ்வளவு அலட்சியம்.


kundi mama
ஜூன் 20, 2025 11:34

இந்த பராமரிப்பு முன்னாடியே செய்து இருந்தால் இப்ப 241 பேர் பலி ஆகி இருக்க மாட்டார்கள். அரசின் அலட்சியம் மற்றும் வியாபாரிகளின் பேராசையால் இன்னும் எத்தனை உயர் போக போகிறதோ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை