உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்

ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: பறவை மோதியதால், புனேவில் இருந்து டில்லிக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் விமானம் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் தரையில் இருந்தவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து விமானங்களை சோதனை செய்ய ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களினால், ஏர் இந்தியாவின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.இந்நிலையில் டில்லியில் இருந்து மஹாராஷ்டிராவின் புனே நகருக்கு ஏர் இந்தியாவின் AI 2470 விமானம் இன்று வந்தது. விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் அதில் பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் புனேயில் இருந்து டில்லி செல்வது ரத்து செய்யப்பட்டு உள்ளது. விமானத்தை ஏர் இந்தியா பொறியாளர்கள் முழுமையாக சோதனை செய்து வருகின்றனர்.இதனையடுத்து டில்லி செல்ல வேண்டிய பயணிகளுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளின் வசதிக்கு ஏற்ப டிக்கெட் ரத்து அல்லது வேறு நாளில் பயணம் ஏற்பாடு செய்து தரப்படும் எனத் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூன் 20, 2025 20:49

ஏர் இந்தியா விமானத்தின் நிறத்தை மாற்றவேண்டும். அது என்ன எல்லாப்பறவைகளும் அந்த ஏர் இந்தியா விமான நிறத்தை பார்த்து மோதுகிறது. Colour Blindness ஏதாவது இருக்குமா பறவைகளுக்கு?


D.Ambujavalli
ஜூன் 20, 2025 18:53

என்னப்பா air India வுக்கு இப்படி சோதனை மேல் சோதனையாக வருகிறதே


spr
ஜூன் 20, 2025 17:35

இந்தப் பிரச்சினைகள் டாடா நிறுவனத்தின் முன்னேற்றம் பிடிக்காத சிலரின் செயலா? பெரும்பாலோர் முந்தைய அரசுப் பணியாளர்களே அவர்களுக்கு உற்பத்தித்திறன் கடமை இவை குறித்த சிந்தனையே இருக்க வாய்ப்பில்லை.மேலும் முன்பெல்லாம் விமானப் பயணத்தின் போது கைபேசி உட்பட மின்னணு சாதனங்கள் விமான மின்னணுச் சாதனங்களை இயங்கவிடாமற் செய்யும் என்று சொல்லி, பயன்படுத்தத் தடையுண்டு. ஒருவேளை அன்றைய விமானங்கள் அப்படித்தான் வடிமைவைக்கப்பட்டனவோ தெரியாது அண்மைக்காலத்து விமானங்களில் காசு கொடுத்தால் கைபேசி பயன்பாடு அனுமதிக்கப்படுகிறது என்றாலும் விமானம் பத்து வருடங்களுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், அதற்கேற்றபடி அமைந்துள்ளதா என்பது தெரியாது தற்பொழுது ட்ரோன் பயன்பாட்டினால் மின்னணுக் குறைகள் உண்டாகலாமா என்றும் தெரியாது உலகமெங்கும் விமானங்கள் இயங்குகின்றன இப்படியொரு பிரச்சினை அதிகம் பேசப்படவில்லை விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள கட்டிடங்களை அகற்ற சதியோ எனவே இது குறித்த முறையான விசாரணை தேவை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை