உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: டில்லியில் அவசர தரையிறக்கம்

இந்தூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: டில்லியில் அவசர தரையிறக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் இருந்து இந்தூர் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே (டில்லி) விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.டில்லி விமான நிலையத்தில் இருந்து இந்தூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது இயந்திரத்தில் தீ பற்றும் சூழல் நிலவியதால் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து டில்லி விமான நிலையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார். விமானம் தரையிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.பின்னர் டில்லி விமான நிலையத்தில் விமானத்தை விமானி பத்திரமாக தரையிறக்கினார். விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு, செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

suresh Sridharan
செப் 01, 2025 08:25

நீங்க ஒரு நாளைக்கு 100 1000 பஸ்கள் அங்கங்க பழுதாய் நிக்குது 100 பஸ் முட்டிக்கிட்டு நிக்குது மோதிக்கிட்டு நிக்குது ஒரு பிளைட் பிரச்சினை வந்தால் ஒன்னும் ஆகப்போவதில்லை இது ஒரு பெரிய நியூஸ் இல்லை ஆகாய மார்க்கமாக நேரடி பயணம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கே


உடான்குமார்
ஆக 31, 2025 19:01

ஏர் இந்தியா இயக்குனர் ஒரு ஃபாரின் ஆளு. அவரை வூட்டுக்கு அனுப்பினா கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியிருக்கும். இல்லேன்னா எப்பவோ ஊட்டுக்கு அனுப்பியிருப்பாங்க.


அப்பாவி
ஆக 31, 2025 18:59

இதெல்லாம் தனித் தனி விமானங்கள் அல்ல. அதே காயலாங்கடை விமானங்கள் தான் மாத்தி மாத்தி வேற வேற ரூட்ல ஓட்டுறாங்க...


பிரேம்ஜி
ஆக 31, 2025 18:11

ஏர் இந்தியா விமானங்களை இறக்கைகளை நீக்கி விட்டு தரை மார்க்கமாக பஸ்போல இயக்கலாம். எவ்வளவு கோளாறு வந்தாலும் கீழே விழுந்து நொறுங்காது!


Anantharaman Srinivasan
ஆக 31, 2025 15:09

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று வருத்தம் தெரிவித்து விட்டால் விமான கம்பெனிகளின் பொறுப்பு முடிந்துவிட்டதா..?. அவசர காரணங்களை முன்னிட்டு கடைசி நேரத்தில் பலமடங்கு கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் துயரத்திற்கு யார் பொறுப்பு. ? காயலான் கடைகளுக்கு போக வேண்டிய விமானங்களை நாட்டின் பல பகுதிகளுக்கு பறக்க அனுமதிப்பதேன்..?


Artist
ஆக 31, 2025 14:46

இந்தியாவில் ஏரோநாட்டிக்கல் படிக்க பெரிய கல்லூரிகள் இல்லை .. அரசியல்வாதிகளுக்கு மெடிக்கல் காலேஜ் தான் காசு தரும் காமதேனு ..


முக்கிய வீடியோ