உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுக்கு ஒரு முடிவே இல்லையா? விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

இதுக்கு ஒரு முடிவே இல்லையா? விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மும்பையில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து இன்று மட்டும் 10 விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. கடந்த 3 நாட்களில் மட்டும் 12 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது விமான நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளது. பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=thavewn8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, இன்றும் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் இருந்து காலை 7:05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. இது லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி 12:05 மணிக்கு தரையிறங்க வேண்டும். ஆனால், லண்டனை நெருங்கிய நேரத்தில், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் வந்தது. இது குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும், மிரட்டல் குறித்து விமானத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். இதனால், பயணிகள் மத்தியில் பீதியை உண்டாக்கியது. லண்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பிறகு சோதனை செய்யப்பட்டது.

ஜெர்மனியில் இருந்து…

இன்று, ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து மும்பை வந்த விஸ்தாரா விமானத்திற்கு சமூக வலைதளம் மூலம் மிரட்டல் வந்தது. இதனையடுத்து, அந்த விமானம் மும்பையில் தரையிறங்கியதும் தனியாக கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது.அதேபோல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த விமானமும் தனியே கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது.6 ஏர் இந்தியா விமானங்கள், விஸ்தாரா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான தலா 2 விமானங்களுக்கும் மிரட்டல் வந்துள்ளது. இதன் மூலம் கடந்த 4 நாட்களில் 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உளவுத்துறை விசாரணை

இதனிடையே, இன்று விடுக்கப்பட்ட மிரட்டல் சம்பவங்கள் குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், மிரட்டல் விடுக்கப்பட்ட இணையதள முகவரியை கண்டுபிடித்து உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து டில்லி வட்டாரங்கள் கூறுகையில், சமூக வலைதளம் மூலம் 3 வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இணையதள முகவரியை ஆய்வு செய்ததில் ஒன்று லண்டனில் இருந்தும், மற்றொன்று டச்லாந்தில் இருந்தும் வந்துள்ளது. இதற்கு வி.பி.என்., செயலியையும் பயன்படுத்தி உள்ளனர். இது குறித்து விசாரணை நடக்கிறது. மிரட்டல் குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளம் நிறுவனத்திடம் கூடுதல் தகவல் கேட்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anantharaman Srinivasan
அக் 17, 2024 22:45

நடைமுறையிலிருக்கும் சட்டத்தின் மீது மிரட்டல் விடுபவர்களுக்கு பயமில்லை. தண்டனை கடுமையாக,உடல் இம்சைபடும் படியாகயிருந்தால் மிரட்டல் விடுவது குறைய வாய்ப்பு.


A R Balakrishnan
அக் 17, 2024 21:52

மிக கடுமையான சட்டங்கள் அரபு தேசத்தில் இருப்பது போல் தேவை. இல்லாவிட்டால் இது தொடர்ந்து இருக்கும்


Anbuselvan
அக் 17, 2024 21:30

ஏன் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்களுக்கு மரண தண்டனை என சட்டம் கொண்டு வந்தால் தீர்வு உண்டு. இப்போது நடந்து கொண்டு இருப்பது ஒரு திட்டமிட்ட சதி/குற்றம் organized crime என தோன்றுகின்றது இந்தியாவின் ஸ்திர தன்மையை சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகளுடன் உள்நாட்டு சதிகாரர்கள் நடத்தும் சாதியாக தோன்றுகிறது.


ramarajpd
அக் 17, 2024 21:12

எப்படி உள்ளே எடுத்துப் போக முடியும் ??


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 17, 2024 21:01

பொய்யுருட்டு பொய்யநாடு ஆசாமிங்க தான் கூட்டிக்கழிச்சி பாருங்க வயித்தெரிச்சல் புகை கிளம்பும். மோடி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே உலகளவில் காசுகொடுத்து நெட்ஒர்க் உள்ளடிவேலை ஜரூராக நடக்கிறது .


Barakat Ali
அக் 17, 2024 20:46

இஸ்ரேல் மீது இந்தியா நடவடிக்கை எடுத்தால் வெடிகுண்டு மிரட்டல்கள் வர வாய்ப்பில்லை .........


Ramesh Sargam
அக் 17, 2024 19:51

மிரட்டல் விடுப்பவர்களை பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். அது என்ன தண்டனை என்று பொதுமக்களுக்கு டிவி சானல்களின் மூலமாக தெரிவிக்கவேண்டும் அல்லது நேரடியாக ஒளிபரப்பவேண்டும். அப்பொழுது மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஓரளவு பயம் வரலாம்.


yuva Kanish
அக் 17, 2024 20:44

இது வரி அல்ல.... பொது மக்களின் ரத்தம் ... உழைப்பு..... வியர்வை.... சொகுசாக அதானி அம்பானி கடன்களை தள்ளுபடி செய்ய அல்ல.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 17, 2024 23:15

யுவ கனிஷ் . அம்பானி ஆட்கள் ரகசியமாக தீய மூர்க்கர்களை சந்தித்து விட்டு சென்றுள்ளனர் பெரிய கான்ட்ராக்ட் கொடுக்கவுள்ளனர் . இதேபோல் ராவுளுக்கட்சி டெலிங்கனாவிலும் நடக்கிறது. வாய்க்கு வந்தததை உளறி உங்களோட பொன்னான கொஞ்சநஞ்ச அறிவை தாழ்த்திக்கொள்ள வேண்டாம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை