உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை

இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - சீனா இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள நேரடி விமான சேவைகளை மீண்டும் துவங்குவது குறித்து, இரு நாடுகளும் பேச்சு நடத்தி வருவதாக சீன துணை துாதர் சூ வெய் தெரிவித்தார்.கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நம் அண்டை நாடான சீனாவுடன் நடந்த மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. கொரோனா தொற்று பரவல் இந்த நடவடிக்கையை மேலும் மோசமாக்கியது. இதனால், பயணியர் மற்றும் வர்த்தக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மத்திய அரசு, சீனாவுடனான உறவை சீரமைப்பதற்கும், பொருளாதார மற்றும் சுற்றுலா தொடர்புகளை மீட்டெடுப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேரடி விமான சேவைகளை மீண்டும் துவங்குவதற்கான பேச்சுகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இது குறித்து, இந்தியாவுக்கான சீன துணை துாதர் சூ வெய் கூறியதாவது:

சீனா - இந்தியா இடையே நேரடி விமான சேவை கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இரு நாடுகளும் இதை மீண்டும் துவங்குவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகின்றன.இந்தியாவுக்கு வரும் சீனர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு இது உதவும். அதேபோல், சீனாவுக்கு செல்லும் இந்தியர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை