உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓசூரில் விமான நிலையம்: தமிழக முதல்வருக்கு கர்நாடகா மாஜி முதல்வர் பொம்மை எதிர்ப்பு

ஓசூரில் விமான நிலையம்: தமிழக முதல்வருக்கு கர்நாடகா மாஜி முதல்வர் பொம்மை எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு, பா.ஜ., எம்.பி.யும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.புதுடில்லியில் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வளர்ந்து வரும் பெங்களூருக்கு கூடுதலாக ஒரு விமான நிலையம் தேவை. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 150 கி.மீ., இடைவெளிக்குள், இரண்டு விமான நிலையங்கள் அமைக்க முடியாது. ஓசூர் தமிழகத்தில் இருந்தாலும், அதன் ஒரு பகுதி, பெங்களூருக்குள்ளும் வருகிறது.இங்கு விமான நிலையம் கட்டவில்லை என்றால், ஏற்கனவே நகரில் உள்ள எச்.ஏ.எல்., விமான நிலையத்தை, உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். நான் முதல்வராக இருந்தபோது, மத்திய பாதுகாப்பு அமைச்சரிடம் பேசினேன். அதற்கு அவர், 'மத்திய அரசு அனுமதி அளித்தால், எச்.ஏ.எல்., விமான நிலையத்தை பயன்படுத்த தயார்' என்றார்.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். நாடு முழுதும், பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை நடத்தியும், அவருக்கு முதிர்ச்சி வரவில்லை. ஆனால், மத உணர்வுகளை தொட்டு பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

S.jayaram
ஜூலை 06, 2024 00:41

வேறொன்றும் இல்லை நீங்கள் மேகதாது அணை கட்ட வேண்டும் என்று கூறுகிறீர்கள் அல்லவா? நாங்கள் அதற்கு எதிர்ப்பு சொன்னாரா எங்க cm இல்லையே. எங்க மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா அதற்குத்தான் இந்த ஓசூர் விமான நிலைய அறிவிப்பு. எல்லாம் மடை மாற்றும் வேலைதான், பின்னே இங்கே எப்ப பார்த்தாலும் கள்ள சாராய சாவு பற்றியே பேசிக்கிட்டு இருக்கானுக .


Madhivanan Shanmugam
ஜூலை 05, 2024 15:26

கவலை வேண்டாம் TN CM மயக்கத்தில் இருக்கிறார்


Boobalakrishnan Ganesan
ஜூலை 05, 2024 15:04

Just remind him that the distance between Bangalore & Mysore is less than 150 KMs


Kannan Iyer
ஜூலை 06, 2024 06:06

வெள் said


K r Madheshwaran
ஜூலை 05, 2024 11:37

உங்கள் பெயரில் எங்கள் மாநில முதல்வர் அவர் சொல்வதை அவரே மறந்து விடுவார் எனவே இங்கு டாஸ்மாக் அடிமைகள் மற்றும் சிறுபான்மையினரால் மட்டுமே அவர் அரசியலில் இருக்கும் நிலை மேலும் நீங்கள் கவலைப்படவேண்டாம் உங்களைப் போன்று அங்க எதிர்ப்பு தெறிவிக்க பல விசுவாசிகள் உண்டு அவர்கள் புண்ணியத்தில் இந்த அறிவிப்பு புஷ் ஆகிவிடும் நீட் ஒழிப்பு மது ஒழிப்பு போன்று இவர்களால் முதலில் மெட்ரோ ரயில் ஓசுருக்கு கொண்டு வர முடியுமா ??????


V RAMASWAMY
ஜூலை 05, 2024 09:42

தமிழக முதல்வருக்கு ஆலோசனை சொல்லும் நபர் தீர ஆராயாமல் குறிப்புகள் கொடுக்கிறார் போல் தெரிகிறது. உள்நாட்டு விமான சேவைக்கு எச் ஏ எல் விமான நிலையம் நன்மை பயக்கும். திரு ராகுல் காந்தி, பிரதமர் சொல்வது போல் இன்னும் பாலகனாகவே இருக்கிறார். குழந்தைத்தனமாகவும் நாடு நலனுக்கு எதிராகவும் பேசுகிறார். அவருக்கும் நல்லதல்ல, தேய்ந்து வரும் காங்கிரசுக்கும் நல்லதல்ல. அவரை சார்ந்தவர்கள் அவருக்கு நல்ல புத்தி வர அறிவுறுத்தவேண்டும்.


Ethiraj
ஜூலை 05, 2024 08:42

Raul trainee LOP we have to give him.sometime to mature Congress wanted their prince to become PM With the help of great leader Stalin he has become LOP Dayanidhi only can become LOP


Shivaji A
ஜூலை 04, 2024 22:49

ஓசூர் தமிழகத்தில் உள்ளது.அதில் நாங்கள் ஏர்போர்ட் கட்டுவோம் அல்லது கக்கூஸ் கூட கட்டுவோம்.


Pandi Muni
ஜூலை 04, 2024 20:38

GSQUARE கொள்ள காசு பாக்க ஒரு விஞ்ஞான திருட்டு திராவிட முயற்சிதான் இது.


SUBBU,MADURAI
ஜூலை 04, 2024 19:37

ஏலே அவனே கள்ளக்குறிச்சி சாராய சாவை மடை மாற்றம் பண்ண ஏதோ ஒரு ஓசூர் விமான நிலையம்னு அடிச்சு விட்ருக்கார் அதை சீரியஸா நம்பி நீங்களும் போலியாக பதில் சொல்வது போல் சொல்லி ஏன் இப்படி அரசியல் செய்றீங்க? உங்களுக்கு எல்லாம் வெ, மா,சூ, சொ, இருக்காதா?


S S
ஜூலை 04, 2024 19:07

பொம்மையின் கருத்திற்கு தமிழக பாஜக பதில் என்ன?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை