உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானப்படை ஓடுதளத்தை விலை பேசி விற்ற தாய்-மகன்; பஞ்சாப் போலீஸ் அதிர்ச்சி

விமானப்படை ஓடுதளத்தை விலை பேசி விற்ற தாய்-மகன்; பஞ்சாப் போலீஸ் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரோஸ்பூர்; இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமான ஓடுதளத்தை தாய், மகன் இருவரும் முறைகேடாக விற்றுள்ள விவரம் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழ் சினிமாக்களில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை அப்பாவி சிலரிடம் விற்பது போன்ற காட்சிகள் உண்டு. நகைச்சுவைக்காகவே எடுக்கப்பட்டவை தான் இந்த காட்சிகள் என்றாலும் நிஜத்தில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது தான் ஆச்சரியம். இதுபற்றிய விவரம் வருமாறு; பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகில் பட்டுவல்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து பாகிஸ்தான் எல்லை மிக அருகில் இருக்கிறது. அங்கு ஒரு விமான ஓடுதளம் உள்ளது. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இந்த ஓடுதளம், 1962, 1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் நிகழ்ந்த போர்களின் போது பயன்படுத்தப்பட்டவை ஆகும்.இந்த ஓடுதளம் அமைந்திருக்கும் இடத்தை பஞ்சாபைச் சேர்ந்த உஷான் அன்சால் என்ற பெண்மணியும், அவரது மகன் நவீன் சந்த் ஆகியோரும் விற்றுள்ளனர். மாஜி வருவாய்துறை அதிகாரி நிஷான் சிங் என்பவரின் புகாரில் பேரில் இந்த விவரம் வெளியாக, இருவரும் மீதும் வழக்கு தொடரப்பட்டது.இதுதொடர்பான வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மாநில ஊழல் கண்காணிப்பு அமைப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அறிக்கையில், 1997ல் போலி பத்திரங்கள் மூலம் உஷா அன்சால், நவீன் சந்த் இருவரும் வருவாய்துறை அதிகாரிகள் உதவியுடன் ஓடுதளத்தை விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவர் மீது ஜூன் 28ம் தேதி எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. மேலும், டி.எஸ்.பி., கரண் சர்மா தலைமையில் முழு விசாரணையும் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 02, 2025 13:54

என்ன தான் உண்மையான நிகழ்ச்சி என்றாலும் தமிழனை பஞ்சாப்காரன் ஜெயிக்க விட மாட்டோம். விடியல் திமுகவினர் ஜெயிப்பார்கள்


Ramesh Sargam
ஜூலை 02, 2025 11:40

அட இப்படி கூட செய்து பணம் சம்பாதிக்கலாமா? சீ, தெரியாம போச்சே என்று திமுக கண்மணிகள் வருத்தம். எதற்கும் தமிழகத்தில் உள்ள விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 02, 2025 10:31

ஒரு படத்தில் சவாலுக்காக LIC 14 மாடிக் கட்டிடத்தை ஏலம் விட்டு சிரிக்க வைப்பார் மௌலி. ஆனால் தனக்கு சொந்தமில்லா ஆலய சொத்துக்களை விற்று சாதனை படைப்பது அறமில்லாத்துறை.


Ganapathy
ஜூலை 02, 2025 10:26

97ல் நடந்த குற்றம் 25 ல் விசாரணைக்கு வந்தால் குற்றம் எப்படி குறையும்? அவங்க இங்க இருக்காங்களா இல்லை வெளிநாட்டுக்கு தப்பியாச்சா? அதாவது தெரியுமா?


வண்டு முருகன்
ஜூலை 02, 2025 10:24

அது சரி ஏரோபிளேன்ஐம் சேர்த்து விக்காம இருந்தாங்களே அதுவரைக்கும் சந்தோஷம்.


SVR
ஜூலை 02, 2025 10:16

இந்த விமான ஓடுதளம் அமைந்த இட சர்வே எண் யாருக்கு சொந்தம் என்று தெரிந்தால் எல்லாம் தெரிந்து விடும். 1997 இல் நடந்திருக்கிறது என்று இந்த செய்தியின் மூலம் தெரியவருகிறது. பாரதியின் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற சொலவுதான் ஞாபகத்திற்கு வருகிறது அழகு அழகு.


Barakat Ali
ஜூலை 02, 2025 09:13

இந்த சாதனைக்காக அவர்களுக்கு துக்ளக்காரும், அவரது வாரிசும் கோப்பையளிக்கவேண்டும் ...


Kalyanaraman
ஜூலை 02, 2025 08:56

விற்றவனை புத்திசாலி என்பதா வாங்கினவனை அறிவிலி என்பதா இருவருமே பஞ்சாபிஸ் ஒன்று புரிகிறது, அங்கு நிர்வாகம் படு மோசமாக இருப்பது மட்டும் தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை