உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இத்தாலி கார் ரேஸில் அஜித் அணி வெற்றி; மீண்டும் தேசியக் கொடியை ஏந்திய அஜித்

இத்தாலி கார் ரேஸில் அஜித் அணி வெற்றி; மீண்டும் தேசியக் கொடியை ஏந்திய அஜித்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித்குமாரின் அணி, 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாக உள்ளன. இது ஒருபுறம் இருக்க, தனக்கு பிடித்த கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங்' அணி 3வது இடம் பிடித்து சாதித்தது.அதன்பிறகு, போர்ச்சுக்கல் போட்டியிலும் பங்கேற்ற அஜித் அணி, தற்போது இத்தாலியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளது. இத்தாலியின் Mugello Circuitல் நடந்த 12எச் ரேஸில் அவர் அணி பங்கேற்றது. இதில் அஜித் அணி GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்து இருக்கிறது.வெற்றி பெற்று பரிசு வாங்க மேடையேறிய போது, அஜித் இந்திய கொடி உடன் சென்றார். அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kalyan
மார் 24, 2025 05:02

அன்புள்ள அஜித் நீங்கள் பல சாதனைகள் புரிந்து இந்தியாவின் பெருமையை நிலை நாட்டி வருவதற்கு வாழ்த்துக்கள் தயவு செய்து, தமிழக அரசியல் சாக்கடையில் மட்டும் ஒருபோதும் இறங்க வேண்டாம் என்று ஒரு ரசிகனாக விண்ணப்பித்துக்கொள்கிறேன்


Saai Sundharamurthy AVK
மார் 24, 2025 00:24

அஜித்துக்கு வாழ்த்துக்கள்!


B MAADHAVAN
மார் 23, 2025 23:51

வெற்றிகள் தொடர நல்வாழ்த்துக்கள்.


Kumar
மார் 23, 2025 23:14

,தேசப் பற்று கொண்ட தங்களை வாழ்த்துகிறேன்


mdstvm
ஏப் 21, 2025 07:21

வாழ்த்துக்கள் அஜித் சார் உலகரங்கில் மூவர்ணக்கொடிய கைகளில் பிடித்த tharunam MDS tvm


Karthik
மார் 23, 2025 23:04

உங்கள் விடாமுயற்சி நிட்சயம் உங்களுக்கு முதல் கிரீடம் சூட்டும்.. வாழ்த்துக்கள்.. Mr.AK


inamar
மார் 23, 2025 22:13

நீங்கள் மேலும் பல வெற்றிகள் பெற்று இந்தியாவின் பெயரை நிலை நாட்டை கடவுளை பிரார்த்திக்கிறோம் .... உங்கள் உடல் நலனிலும் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை