உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய்கள் விவகாரம்; வேலி அமையுங்கள், கண்காணியுங்கள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தெருநாய்கள் விவகாரம்; வேலி அமையுங்கள், கண்காணியுங்கள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''அரசு கட்டடம், மருத்துவமனை, ரயில் நிலையங்களில் தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும்,'' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அமர்வு இன்று (நவ.,07) பிறப்பித்துள்ள உத்தரவு:* மருத்துவமனைகள் விளையாட்டு வளாகங்கள் ரயில் நிலையங்கள் பள்ளி அருகே என அனைத்து இடங்களிலும் இருந்து உடனடியாக தெரு நாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.* பொது இடங்களில் தெருநாய்கள் நுழையாமல் கண்காணித்து தடுக்க வேண்டும்.* தெருநாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடக்கூடாது. அவற்றை முறையான தங்குமிடத்தில் மாற்ற வேண்டும்.* சாலைகளில் திரியும் கால்நடைகளை கண்காணித்து புகார் அளிக்க குழு அமைக்க வேண்டும். * இந்த புதிய உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். * இந்த உத்தரவுகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் 8 வாரங்களில் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெருநாய் பிரச்னை வழக்கு பின்னணி?

* தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, இது தொடர்பாக கடந்த ஆக., 11ல் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. டில்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுற்றித்திரியும், தெருநாய்களை பிடித்து உடனடியாக காப்பகங்களில் அடைக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.* இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் பலர், உச்ச நீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்த மனுக்கள், ஆக., 22ல் விசாரணைக்கு வந்தன. அப்போது, தெருநாய்க்கடி சம்பவத்தை சமாளிப்பது தொடர்பாகவும், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்தும் விளக்கம் அளிக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.* தெருநாய் கருத்தரிப்பு தடுப்பு அறுவை சிகிச்சை எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த 27ல் நடந்த விசாரணையின் போது, மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர, பிற மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.* மேலும், தலைமை செயலர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது. நவம்பர் 3ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.* இந்த வழக்கில் இன்று (நவ., 07) சுப்ரீம்கோர்ட் மேலும் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

தாமரை மலர்கிறது
நவ 07, 2025 20:36

எல்லா நாய்களையும் குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்பது சரியானது. ஆனால் அவற்றை மீண்டும் தெருவில் விடாமல் வேறொரு தங்குமிடத்தில் விட வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. காரணம் பள்ளிகள் கட்ட கூட வசதி இல்லாத இந்த நாட்டில், நாய்கள் தங்க வசதிகள் எங்கு ஏற்பாடு செய்யப்போகிறார்கள்? அந்த நாய்களுக்கு யார் சாப்பாடு போட போகிறார்கள். வெறுமனே அந்த நாய்களை விஷஊசி போட்டு கொல்ல போகிறார்கள் என்பது தான் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. சிலருக்கு இந்த உண்மை தெரியும். பலருக்கு தெரியாது. அதனால் அவர்கள் இந்த தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். உண்மை தெரிந்த சிலர் கண்ணை மூடிக்கொண்டு தனது பிரச்சனை ஒழிந்தால் போதும் என்று நினைத்து நாய் இனத்தை ஒழிக்க நினைத்தால், கால பைரவர் சும்மா விடமாட்டார்.


Venkatesan Srinivasan
நவ 07, 2025 22:39

மாட்டுத்தீவன ஊழல் தந்தை, சர்க்காரியா குறிப்பிட்ட அறிவியல் பூர்வ ஊழல் தந்தை, அவர்கள் காட்டிய பாதையில் அப்பப்பா என "இன்டி ஆன்டி" ஆட்சியாளர்கள் இந்த முள்வேலி திட்டத்தையும் நாய்களுக்கு உணவளிக்க தனி வாரியம் அமைத்தும் கொண்டாடி மகிழ்வார்கள்.


tamilvanan
நவ 07, 2025 19:50

என்ன செலவு பிடிக்கும் என்று தெரியுமா? வேலி அமைக்க ஒப்பந்ததாரர்கள் நியமித்தால், எவ்வளவு பணம் வேலி அமைக்க பயன்படும் என்பது நீதிபதிகளுக்கு தெரியாதா? அதுவும் கருத்தடை செய்த நாய்களை பாதுகாப்பான இடத்தில் விட வேண்டுமாம். மற்ற உயிரினங்களுக்கு கேடு என்று தெரியாதா? நானே பார்த்து இருக்கிறேன் கிண்டி மான் பாதுகாப்பு வனத்தில் நாய்கள் கடித்து எத்தனை மான்கள் உயிர் விட்டு இருக்கின்றன. பொது மக்களுக்கு பாதுகாப்பு தேவை, தெரு நாய்களுக்கு அல்ல. பேசாமல் தெரு நாய்களை நீதி மன்றத்தில் விட்டு விடுங்கள. பிறகு தான் நீதிபதிகளுக்கு மக்கள் பிரச்னை புரியும்.


தத்வமசி
நவ 07, 2025 19:47

உங்களுக்கு என்னபா அரசு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விடும். எங்களின் தெருக்களில் வசிக்கும் தெரு நாய்கள் செய்யும் அட்டகாசம் தாங்கமுடியவில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 07, 2025 18:57

நீட்டிபட்டிகளையோ, அவர்களது குடும்பத்தாரையோ வெறிநாய் கடித்து வீட்டில் உயிரிழப்பு ஏற்படாதவரை அவர்கள் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் .....


Anantharaman Srinivasan
நவ 07, 2025 18:22

கும்பகோணம் அருகே 3 நாய்கள் கடித்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 52 கோழிகள் உயிரிழந்தன.


Karthik
நவ 07, 2025 18:18

மிகவும் தேவையான ஒரு தீர்ப்பு கோடி நமஸ்காரங்கள் இந்த தீர்ப்பை சொல்லியவருக்கு


Kumar Kumzi
நவ 07, 2025 17:50

கட்டிங் கமிஷனுக்கு நல்லதோர் திட்டம் கெடச்சாச்சு என்ஜாய்


Sun
நவ 07, 2025 17:44

செருப்புக்கு பதிலா கால்களை வெட்டச் சொன்ன கதையா இருக்கு! இங்கு வெறிபிடித்த மனிதர்களை கூட என் கவுண்டரில் போடலாம். ஆனால் வெறிபிடித்த நாய்களை போட முடியாது. ஒரே நாளில் இறைச்சிக்காக ஆயிரக்கணக்கில் ஆடு, மாடுகள் வெட்டப் படுகிறதே அதெல்லாம் உயிர்கள் இல்லையா? இதைக் தட்டிக் கேட்க நாய் ஆர்வலர்கள் போல் ஆடு ஆர்வலர்கள், மாடு ஆர்வலர்கள் என யாருமே இல்லையா?


முருகன்
நவ 07, 2025 17:03

நாட்டில் சில இடங்களில் மனிதனுக்கே தங்குவதற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு உன்பதற்கு வழியில்லை இதில் இது வேறு


Raja
நவ 07, 2025 16:38

இந்தியாவில் இருக்கும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யலாம்...அந்நிய செலாவணியும் கிடைக்கும்..நம் நாட்டிற்க்கும் நிம்மதி.