உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு ரத்தாகும்: பிரசாந்த் கிேஷார் கட்சி அறிவிப்பு

பீஹாரில் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு ரத்தாகும்: பிரசாந்த் கிேஷார் கட்சி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'பீஹாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது அமலில் உள்ள மதுவிலக்கை நீக்குவோம்' என, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தெரிவித்துள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பீஹாரில், 2016 முதல் மது விலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், பீஹாரைச் சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியில் லோக் ஜன் சக்தி ராம் விலாஸ் பிரிவைச் சேர்ந்த குமார் சவ்ரவ் நேற்று இணைந்தார். நிகழ்ச்சியில், ஜன் சுராஜ் கட்சியின் தேசிய தலைவர் உதய் சிங் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் அமலில் உள்ள மது விற்பனை மீதான தடையை உடனே நீக்குவோம். மது விலக்கு காரணமாக 28,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ