வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதற்கு என்ன விளக்கம் குடுப்பாரு?
ஹிசார்:சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேரையும் டில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை அளிக்க முடியாது என்று கூறியது. டில்லியில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் சிறுமியும் அவளது தாயும் தங்கியிருந்தனர். 2023 செப்டம்பர் 25 அன்று மைனர் சிறுமியை ஒரு பெண் உட்பட ஒன்பது பேர் காசியாபாத்திற்கு அழைத்துச் சென்று, கூட்டுப் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பின், அதை வாபஸ் வாங்கினார். பின் எட்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் கூறிய நபர்களில் சிலர் டில்லியிலேயே இல்லை. மேற்கண்ட பல்வேறு முரண்பாடுகளை கூடுதல் அமர்வு நீதிபதி அமித் செராவத் சுட்டிக்காட்டி தீர்ப்பளித்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரில் தெளிவில்லை. போலீசார் விசாரணையிலும் சிறுமி தாய் அளித்த புகார்களில் சில பொய் என்பது தெரிய வந்துள்ளது. அவரது செல்போனில் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நீதிபதி கவனத்தில் கொண்டார். சிறுமிக்கு இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட்ட 3.75 லட்ச ரூபாயை மீட்டெடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று நீதிபதி தன் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கு என்ன விளக்கம் குடுப்பாரு?