உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொறுப்பற்ற குற்றச்சாட்டு;காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

பொறுப்பற்ற குற்றச்சாட்டு;காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தெரிவித்த புகார்களை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்தது; பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளால் குழப்பமும், அமைதியின்மையும் ஏற்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் கட்சி இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தன.ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்தன. பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் நொந்து போன காங்கிரஸ் தலைவர்கள், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினர்.இதை விசாரித்த தேர்தல் ஆணையம், காங்கிரஸ் அளித்த புகாரை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்கு ஆணையம் அனுப்பியுள்ள பதிலில், தன் கடுமையான கண்டனத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது.ஆணையம் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டு எண்ணிக்கை நடைமுறை மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதால், குழப்பமும், பொது அமைதியின்மையும் ஏற்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.கடந்த ஓராண்டில் நடந்த குறிப்பிட்ட 5 சம்பவங்களை தெரிவித்துள்ள ஆணையம், தேர்தல் நடைமுறைகளின் மீது எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் தொடர்ந்து புகார்களை கூறுவதை தவிர்க்கும்படியும் காங்கிரஸ் கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பேசும் தமிழன்
அக் 30, 2024 07:48

கான்கிராஸ் கட்சி.... அவர்கள் வெற்றி பெற்றால் மக்கள் தீர்ப்பு என்றும் தோல்வி அடைந்தால் ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது பழி போடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.. தேர்தல் ஆணையம் மீது மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிய அந்த கட்சியை தடை செய்தாலும் பரவாயில்லை.


Kasimani Baskaran
அக் 30, 2024 05:53

தேர்தல் முடிந்தவுடன் சொல்ல மாட்டார்கள் - அனால் முடிவு வந்தவுடன் காரணம் தேடுவார்கள். அதில் எளிதான காரணம் இவிஎம் தான்


xyzabc
அக் 30, 2024 00:47

கேவலமான கார்கே ஒரு reason


தாமரை மலர்கிறது
அக் 29, 2024 23:19

உலகத்தரமான வோட்டிங் மெஷினை தேர்தல் கமிஷன் பயன்படுத்துகிறது. தவறு ஏற்பட வாய்ப்பே இல்ல ராஜா .


ஆரூர் ரங்
அக் 29, 2024 21:52

இதற்காகவே அவர்களது சின்னத்தை ஓராண்டுக்கு மறுத்து விடுங்கள்.


rama adhavan
அக் 29, 2024 22:08

தேர்தல் ஆணையத்தால் முடியாது. பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் ஆணையிட்டால் முடியும்.


sridhar
அக் 29, 2024 21:49

தோற்றால் evm முறைகேடு . ஜெயித்தால் மக்கள் ஆதரவு என்று பீலா விடும் காங்கிரஸ் மக்கள் விரோதிகள் .


தாமரை மலர்கிறது
அக் 29, 2024 21:17

அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதவரை, பொய் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் வீசும். முதலில் ராகுல், கார்கே மற்றும் ஹரியானா காங்கிரஸ் தலைவரை ரெண்டு ஆண்டுகளுக்கு உள்ளே தள்ளினால், மஹாராஷ்டிராவில் இவர்கள் கதறுவதை நிப்பாட்டுவார்கள்.


rama adhavan
அக் 29, 2024 21:04

முதலில் கோல் போட்டவன் தான் வெற்றி பெறுவான். முதல் விக்கெட் ஜோடி நூறு ரன் அடித்தால் அந்த டீம் தான் வெற்றி பெற வேண்டும், முதல் சில வினாக்களில் முற்றிலும் சரியாக விடை எழுதியவன் இப்படி மீதி வினாகளில் தவறு செய்வான் என்பது போன்ற பிதற்றல் இது. பித்தம் முற்றி விட்டது. இதற்கு மருந்தே இல்லை.


M Ramachandran
அக் 29, 2024 20:43

பொது மக்கள் இந்த கும்பலை இத்தாலிக்கு துரத்த வேண்டும். பல நிதி மோசடி செய்யும் கட்சி. நம் நாட்டின் ஆளுமைக்கு ஆபத்து விளைவிக்கும் பொறாமையுடைய அசூகையாஉள்ள நாட்டின் ஐந்தாம் படை தலைமை உடைய அபத்தமான ஆபத்தான கட்சி.


M Ramachandran
அக் 29, 2024 20:36

இவர்களெல்லாம் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரிய வில்லை. கண்டதை தின்னு கண்ட படி வாந்தி எடுக்குறான்கள்


சமீபத்திய செய்தி