உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யா...யா... போட்ட வழக்கறிஞர்; குட்டு வைத்தார் தலைமை நீதிபதி; சுப்ரீம் கோர்ட்டில் சுவாரஸ்யம்!

யா...யா... போட்ட வழக்கறிஞர்; குட்டு வைத்தார் தலைமை நீதிபதி; சுப்ரீம் கோர்ட்டில் சுவாரஸ்யம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர், நீதிபதியிடம், 'யா...யா...' என பதில் அளித்தார். இதைக்கேட்டதும் கோபமுற்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ' இது ஒன்றும் காபி ஷாப் இல்லை, ஆம் என்று சொல்லிப்பழகுங்கள்' என்று அறிவுறுத்தினார்.உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் வழக்கு விசாரணை ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, ' இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உள் விசாரணை நடத்த வேண்டும்' என்று வழக்கறிஞர் கோரினார்.இதற்கு, ' இது ஒரு சட்டப்பிரிவு 32 மனுதானா? நீதிபதியை எதிர்மனுதாரராக வைத்து நீங்கள் எப்படி பொதுநல மனுவை தாக்கல் செய்யலாம்' என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேட்டார். இதற்கு பதில் அளிக்கும் போது, வழக்கறிஞர், 'யா...யா...' என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் டென்ஷன் ஆனார். தலைமை நீதிபதி, 'இது ஒரு காபி ஷாப் இல்லை! இது என்ன யா...யா... இந்த வார்த்தை எனக்கு அலர்ஜி. ஆம் என்று சொல்லிப்பழகுங்கள்' என கோபத்துடன் தெரிவித்தார். ''கோகோய் இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தார். நீதிபதிக்கு எதிராக இதுபோன்ற மனுவை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. உள் விசாரணையை நீங்கள் கேட்க முடியாது' என்று சந்திரசூட், வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

K.Rajasekaran
அக் 04, 2024 05:19

சரியான பதில்


Paul Leo
அக் 01, 2024 13:06

Wishes to Honourable CJI Some advocates act very cleverly


Kasimani Baskaran
செப் 30, 2024 21:36

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சட்டம் பொருந்தாது என்று ஒரே போடாக போட்டிருக்கலாம்.


kulandai kannan
செப் 30, 2024 20:20

யா யா என்று சொல்வதற்கு பேச்சுரிமை இல்லையா?? ஊருக்கு தான் உபதேசமா?


Jagan (Proud Sangi)
செப் 30, 2024 18:03

என்ன தீர்ப்பு வந்து என்ன புண்ணியம் ? பொன்முடி மாதிரி தண்டிக்க பட்ட குற்றவாளிக்கு கூட தடை விதிக்கும் உச்ச நீதிமன்றம் ஏன் இது போல் ஸ்டாண்ட் அடித்து விளம்பர தேடிக்கொள்கிறார்கள் ?


Jagan (Proud Sangi)
செப் 30, 2024 18:02

பொன்முடி மாதிரி தண்டிக்க பட்ட குற்றவாளிக்கு கூட தடை விதிக்கும் உச்ச நீதிமன்றம், யா யா என்று சொன்னால் என்ன குறைச்சல்? யா யா போதும் இது போன்ற நீதிமன்றங்களுக்கு


Jagan (Proud Sangi)
செப் 30, 2024 18:02

பொன்முடி மாதிரி தண்டிக்க பட்ட குற்றவாளிக்கு கூட தடை விதிக்கும் உச்ச நீதிமன்றம், யா யா என்று சொன்னால் என்ன குறைச்சல்? யா யா போதும் இது போன்ற நீதிமன்றங்களுக்கு


Gnanam
செப் 30, 2024 17:43

செந்தில் பாலாஜி கேஸ் இல் ஜாமின் கொடுக்காத போதே நீதியின் வண்டவாளம் புரிந்து விட்டது வெளியே விட்டால் சாட்சி களைத்த்டுவார்..அவன் உள்ளே இருந்தே மேயர்,இடை தேர்தல் ன்னு கட்சி,ஆட்சி சம்பந்த பட்ட வேலை செய்யிரான்..போங்க சார்...உங்க நீதியும்...ட்ரின்க் அண்ட் டிரைவ் மட்டும் தீர்ப்பு சொல்லுவீங்க நல்லா


S MURALIDARAN
செப் 30, 2024 17:15

நீதித்துறை இன்னும் சாகவில்லை


Narayanan
செப் 30, 2024 16:04

இதெல்லாம் சரிதான் . ஆனால் செந்தில் பாலாஜிக்கு மட்டும் கஜ்ரிவாலுக்கு அளித்த மாதிரி அரசாங்க கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது என்ற நிபந்தனை ஜாமினில் ஏன் விதிக்கவில்லை உச்சநீதிமன்றம் . எங்கே தன்னை திகார் சிறைக்கு கொண்டுபோய் விடுவார்களோ என்று நினைத்து ஆபரேஷன் நாடகம் . நீதிபதி அல்லி கூப்பிடும்போதெல்லம் காணொளி வாய்யிலாக மட்டும் தோன்றி அப்பா என்ன நாடகம். ஜாமினில் வந்தவுடன் என்ன ஒரு துள்ளல் . அதற்கு உச்சநீதிமன்றம் துணை போனது கவலை அளிக்கிறது. இந்த முடிவை எடுக்கும் முன்னர் நீதிபதி அல்லியையும் மாற்றி . அப்பப்பா என்னே விளையாட்டு . சட்டம் ஒரு இருட்டறை தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை