உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: துணை முதல்வராக பவன் கல்யாண் நியமனம்

ஆந்திராவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: துணை முதல்வராக பவன் கல்யாண் நியமனம்

அமராவதி: ஆந்திராவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம்( ஜூன் 12) பதவியேற்று கொண்டார். பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் சட்டம் ஒழுங்கு துறை உள்ளிட்ட சிலவற்றை தன் வசம் வைத்துள்ளார்.பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதுடன், அவரிடம் பஞ்சாயத் ராஜ், ஊரக வளர்ச்சி, ஊரக குடிநீர் விநியோகம், சுற்றச்சூழல், வனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷிடம் மனித வள மேம்பாடு, ஐடி ஆகிய துறைகளும்பையவுலா கேசவிடம் நிதித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Duruvesan
ஜூன் 14, 2024 18:09

இனி நாயுடு இண்டி கூட்டணிக்கு போக முடியாதா ?? பவன் கல்யான் ஜி விடியல் சார் மன வாடு.


INDIAN Kumar
ஜூன் 14, 2024 17:10

வாழ்த்துக்கள் ஆந்திர அமைச்சரவைக்கு , நல்லாட்சி கொடுக்க வாழ்த்துக்கள்.


Ganesun Iyer
ஜூன் 14, 2024 16:32

எல்லா ஜோசியகாறர்களின் கணிப்பு படி இன்னும் நேரம் வரவில்லை...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி