உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி

புதுடில்லி : பாசுமதி அல்லாத இதர அரிசி ரகங்களை 10 லட்சம் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் குடோன்கள் நிரம்பி வழிவதால், மூன்று ஆண்டு காலமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், நேற்று நடந்த மத்திய அமைச்சர்கள் அடங்கிய அதிகாரக் குழுவில், இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. அதேநேரத்தில், கோதுமை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உணவு பணவீக்கம் அதிகரித்ததால், பாசுமதி அல்லாத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதிக்கு, கடந்த 2008ம் ஆண்டில் மத்திய அரசு தடை விதித்தது. கோதுமை ஏற்றுமதிக்கு அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாக 2007ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரித்து, அரசு குடோன்கள் நிரம்பி வழிவதாலும், மேலும், இருப்பு வைக்க போதிய இடவசதி இல்லை என்பதாலும், 10 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.தற்போது அரசு குடோன்களில் 6.5 கோடி டன் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. உணவு தானியங்கள் உற்பத்தி 2011-12ம் ஆண்டில் 24.5 கோடி டன்னை எட்டும் என்றும் விவசாய அமைச்சகம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி