உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்புலன்ஸ் தர மறுப்பு; தாய் உடலை வீட்டிற்கு ஸ்ட்ரெச்சரில் இழுத்து சென்ற மகன்

ஆம்புலன்ஸ் தர மறுப்பு; தாய் உடலை வீட்டிற்கு ஸ்ட்ரெச்சரில் இழுத்து சென்ற மகன்

பாட்னா: மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை, வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால், ஸ்ட்ரெச்சரிலேயே பல கிலோமீட்டர் தூரம் மகன் இழுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. இது குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. பீகாரின் சசாரம் மாவட்டத்தில் வசிக்கும் சஞ்சய் குமார் என்பவரின் தாய், உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது தாய் உயிரிழந்தார். சஞ்சய் தன் தாயின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி கேட்டார். ஆனால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளதாக தெரிகிறது.இதனால் மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் தன் தாயின் உடலை வைத்து, தன் வீட்டிற்கு இரவில் பல கிலோமீட்டர் இழுத்துக் கொண்டு சஞ்சய் சென்றுள்ளார். இதனை பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இதனையடுத்து சசாரம் மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு அடிப்படை தேவையான ஆம்புலன்ஸ் வசதி கூட மறுக்கப்பட்டது குறித்து அரசு விசாரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rathna
டிச 09, 2025 12:36

மனிதாபிமானம் இல்லாத மிக மோசமான நிலைமை. டெல்லி கவனிக்க வேண்டும்.


Apposthalan samlin
டிச 09, 2025 11:13

யாருக்கு வேணும் என்றாலும் வோட் போடுங்கள் பிஜேபி கு வோட் போட்டால் ...


Karunai illaa Nidhi
டிச 09, 2025 12:45

கண்ணுக்கே தெரியாது. கதறு


ஜெய்ஹிந்த்புரம்
டிச 09, 2025 10:11

என் ஆழந்த அனுதாபங்கள்.


varatharajan
டிச 09, 2025 08:34

இதே நிலை தமிழ்நாட்டுல நடந்திருந்தா இந்த பயலுக இன்னா என்ன ஆட்டம் போடுவானுங்க


Karunai illaa Nidhi
டிச 09, 2025 12:46

எற்கனவே நடந்துகிட்டு தான் இருக்கு.


VENKATASUBRAMANIAN
டிச 09, 2025 08:09

இது இங்கேயே நடந்ததுதான். உடனே பிஜேபி என்று கூவவேண்டாம். 200 உண்டு. சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் ஐ டிஸ்மிஸ் செய்ய வேண்டும்


ramesh
டிச 09, 2025 09:47

உலகம் அறிந்த ரகசியத்துக்கு ஏன் இவ்வளவு முட்டு கொடுக்கிறீர்கள்


P D Paul
டிச 09, 2025 07:32

Vote for bjp


Karunai illaa Nidhi
டிச 09, 2025 12:48

இல்லை.


புதிய வீடியோ