மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
7 hour(s) ago | 6
கார்வார்: ''அரசியலமைப்பு சட்டத்தை திருத்த, லோக்சபா தேர்தலில் பா.ஜ., 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும்,'' என்று, கர்நாடக பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே பேசியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உத்தர கன்னடா தொகுதி பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே. இவர், நேற்று முன்தினம் கார்வார் அருகேயுள்ள ஹலகேரி கிராமத்தில் நடந்த பா.ஜ., தொண்டர்கள் கூட்டத்தில் பேசியதாவது:அரசியலமைப்பு சட்டத்தில் முந்தைய காங்., ஆட்சியாளர்கள் தேவையில்லாததை சேர்த்து உள்ளனர். ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தை ஒடுக்கும் வகையிலும், சிதைக்கும் வகையிலுமான அம்சங்களை சட்டத்தில் சேர்த்துள்ளனர். எனவே, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.இதற்கு பார்லிமென்டின் இரு சபைகளிலும் பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை வேண்டும். லோக்சபா தேர்தலில், 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்., உட்பட பல தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கர்நாடக பா.ஜ.,வின், 'எக்ஸ்' பக்கத்தில், 'அனந்த்குமார் ஹெக்டே கூறி இருப்பது, அவரது சொந்த கருத்து; கட்சியின் நிலைப்பாடு இல்லை. நாட்டின் அரசியலமைப்பில், எங்கள் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. அனந்த்குமார் ஹெக்டே கருத்து பற்றி, கட்சி அவரிடம் விளக்கம் கேட்கும்' என, கூறப்பட்டு உள்ளது.
7 hour(s) ago | 6