உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக வரி செலுத்துவோர் பட்டியல்; ரூ.120 கோடி செலுத்தி அமிதாப் பச்சன் முதலிடம்

அதிக வரி செலுத்துவோர் பட்டியல்; ரூ.120 கோடி செலுத்தி அமிதாப் பச்சன் முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில், நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.கடந்த 1969ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய அமிதாப் பச்சன், 55 ஆண்டுகளாக பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 82 வயதாகிறது. இந்திய திரைத் துறையின் மூத்த நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன் 2024-25ம் நிதியாண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். ரூ.120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக, அமிதாப் பச்சன் தொடர்ந்து திகழ்கிறார். இதன் மூலம் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ரூ.92 கோடி வரி செலுத்தி ஷாருக்கான் முதலிடத்தில் இருந்தார். கடந்தாண்டு நான்காம் இடத்தில் இருந்த அமிதாப் பச்சன், தற்போது ரூ.120 கோடி வரி செலுத்தியதன் மூலம் ஷாருக்கானை விஞ்சி, முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். சல்மான் கான் ரூ.75 கோடி வரி செலுத்தி உள்ளார். வயதானாலும், அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைத்துறையில் அமிதாப் பச்சன் ஆதிக்கம் செலுத்துகிறார் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
மார் 18, 2025 19:25

வெரி குட். இந்தியர்கள் சிறந்த தேசப்பற்றாளர்கள். சுதந்திரம் வாங்க தாலியை கொடுத்தவர்கள். இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்த, அனைத்து ஜிஎஸ்டி வரியை முப்பது சதவீதமாக உயர்த்தினால் கூட, சந்தோஷமாக வரி செலுத்துவார்கள். சீனாவை முந்த, இந்தியாவின் வளர்ச்சி மேம்பட, ஜிஎஸ்டி வரி உயர்வு அத்தியாசியம். ஜிஎஸ்டி உயர்ந்தால், கார்ப்பரேட் வரியை குறைக்க முடியும்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 18, 2025 15:56

இவர் சம்பாதித்த பண விபரங்களை மறைக்காமல் உண்மையாக 120 கோடி வரி செலுத்தி இருந்தால் பாராட்டலாம். ஏனெனில், திரைத்துறையினர் எவருமே தாங்கள் பெறும் சம்பளத்திற்கு வரி கட்டுவதில்லை. செக் மூலம் பெரும் பணத்துக்கு மட்டுமே வரி கட்டுகின்றனர். சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகத்தான் செக் மூலம் பணம் பெறுகின்றனர்.


Balasubramanian
மார் 18, 2025 15:11

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ரூ 5000 கோடிக்கும் மேல் வரி செலுத்தி உள்ளார்! நிதி வம்சத்தினர் ஒருவர் மத்திய அமைச்சர் ஆக இருந்த போது தொலைபேசி தொடர்பை தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக கொள்ளை அடித்த குடும்பத்தினர் நினைத்து பார்க்க வேண்டும்


M Ramachandran
மார் 18, 2025 13:55

வருமான வரியா அது என்ன என்று கேட்க்கும் ராவுளுவும் ஸ்டாலின் குடும்ப கூட்டமும் இந்த பதிவை பார்க்கலாம்.


Ramesh Sargam
மார் 18, 2025 11:42

அவர் அதிகம் சம்பாதிக்கிறார். அதிகம் வரி கட்டுகிறார். இதில் என்ன பெருமை.


TamilArasan
மார் 18, 2025 12:14

இதை விட குறைவாகவா தமிழக முதல்வர் குடும்பம் சம்பாதிக்கும்? ஏன் அவர்கள் வரி கட்டுவது இல்லை...? நாட்டில் அதிக வரி கட்டுவது பெருமைதான் காரணம் அரசு அந்த வரிப்பணத்தில்தான் நல திட்டங்களை செயல்படுத்துகிறது