உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அய்யய்யோ, ஆள விடுங்க சாமி; அலறுகிறது அமுல் நிறுவனம்!

அய்யய்யோ, ஆள விடுங்க சாமி; அலறுகிறது அமுல் நிறுவனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுதி செய்துள்ளது. இதற்கு மத்தியில், திருப்பதிக்கு நாங்க ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை எனக் கூறி அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tfvj4vga&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமுல் நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற எங்களின் அதிநவீன உற்பத்தி நிலையங்களில் அமுல் நெய் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அமுல் நெய் உயர்தர தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எங்கள் பால் பண்ணைகளில் பெறப்படும் பால் கடுமையான முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. FSSAI வழிகாட்டுதல்படி கலப்படம் கண்டறிதல் உட்பட கடுமையான தர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.முந்தைய ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் பிற தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதை அடுத்து நாடு முழுவதும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் அமுல் நிறுவனம் இந்த விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

JAYAKUMAR V
செப் 22, 2024 18:10

When prasadams were sold outside temple the sanctuaty went off. Poor pilgrims. And moreover TTD darsan ticket cost in including cost of laddu.


Velan Iyengaar
செப் 22, 2024 08:18

ஜகன்ரெட்டி ஆதரவு அளித்த மசோதாக்களை எல்லாம் இப்போ திரும்ப பெறுவார்களா ?? இல்லையெனில் அவை பாவத்தின் சம்பளமாக தான் ராமரும் பெருமாளும் பார்ப்பார்கள்


Ram pollachi
செப் 21, 2024 22:24

இடையன் கிட்ட பால் கிடைக்கும், கசாப்பு கடையில் கொழுப்பு கிடைக்கும் ... பெரும்பாலான பேக்கரி தின்பண்டங்களில் கட்டாயம் இதன் பங்கு இருக்கும்...


Velan Iyengaar
செப் 21, 2024 18:33

ஜெகன் ஆதரவில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் எல்லாம் மட்டும் இனிக்கும் .... நாய் விற்ற காசு குறைக்காது தானே ???


Ethiraj
செப் 21, 2024 17:29

All food products to be periodically checked at delivery point by private labs all over country Ghee Butter Milk Oils etc Politicians and public servants are most unreliable and unethical most of the time.


venugopal s
செப் 21, 2024 17:05

சிக்கிக் கொள்ளாத வரை எல்லோரும் யோக்கியர்கள் தான்!


வைகுண்டேஸ்வரன்
செப் 21, 2024 16:07

சி பி ஐ இருக்கட்டும். இத்தனை ஆண்டுகள் திருப்பதி பெருமாள் என்ன பண்ணிண்டிருந்தார்??


Ethiraj
செப் 21, 2024 17:32

Entire stick of laddu dont go through lords sanctum. The laddu what you buy in Tirupati is like any Laddu in any sweet shop Dont buy Laddu in tirupati All the infrastructure and staff can be choked to death.


sridharan rangamannar
செப் 22, 2024 08:14

அதுதானே,


வைகுண்டேஸ்வரன்
செப் 21, 2024 16:06

//கடவுள் பாலாஜியின் பக்தர்கள் உலகம் முழுவதும் பொங்கிட்டாங்க.// அதனால் இப்போது லட்டு விற்பனை அதிகரித்து, ஒரு நாளைக்கு 3லட்சம் விற்ற லட்டுகள் இப்போது ஒரு நாளைக்கு 5 லட்சம் விற்கிறது.


வைகுண்டேஸ்வரன்
செப் 21, 2024 16:03

லட்டு விற்பனை அதிகரித்து விட்டது என்று டதெலுங்கு டி வி யில் காட்டுகிறார்கள். இதுக்கு சி பி ஐ விசாரணை வேணுமா? இதுவரை சி பி ஐ எத்தனை ஆணி புடிங்கியிருக்கிறது??


வைகுண்டேஸ்வரன்
செப் 21, 2024 16:01

கோமியம் தப்பில்ல, புனிதம் என்றால் பசுவின் கொழுப்பின் ஒரு பாகமான நெய்யும் தப்பில்ல தானே?


சமீபத்திய செய்தி