உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு இட்லி ரூ.70, பூரி செட் ரூ.120 மூணாறில் ஓட்டல்களில் கொள்ளை

ஒரு இட்லி ரூ.70, பூரி செட் ரூ.120 மூணாறில் ஓட்டல்களில் கொள்ளை

மூணாறு:மூணாறில் சாதாரண ஓட்டல்களில் கூட தாறுமாறாக விலை வைத்து விற்பதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.மூணாறில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் விதத்தில் ஓட்டல், தங்கும் விடுதிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் புறவழி சாலை பாலம் அருகில் உள்ள சாதாரண ஓட்டலில் நட்சத்திர ஓட்டல் போன்று பூரி செட் ரூ.120, இட்லி ரூ.70, காபி ரூ.30, உப்புமா ரூ.80, சாப்பாடு ரூ.250 என வசூலிக்கின்றனர். அந்த ஓட்டல் பில் வலைதளங்களில் பரவி கண்டனங்களை சந்தித்து வருகிறது. தங்கும் விடுதிகளிலும் வரைமுறையின்றி கட்டணம் வசூலிக்கின்றனர். சீசன் காலங்களில் சிறிய அறைக்கு கூட ஆடம்பர அறைகளை மிஞ்சும் அளவில் ரூ.ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

காரணம் என்ன

மூணாறில் சீசனில் மட்டுமே வருமானம் கிடைக்கும். இதனால் பெரும்பாலான ஓட்டல், பேக்கரிகளை அவற்றின் உரிமையாளர்கள் நாள் வாடகைக்கு விடுகின்றனர். சீசன் இல்லா நேரங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட சீசனில் விலையை உயர்த்திவிடுகின்றனர். இது சுற்றுலா பயணிகளிடம் விரக்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. எனவே ஓட்டல், விடுதிகளுக்கு விலையை நிர்ணயித்து வெளிப்படையாக காட்சிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் சுற்றுலா நலிவடைவதை தவிர்க்க இயலாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

S.jayaram
டிச 02, 2024 09:24

வருகிற மக்கள் அனைவரும் பணக்காரர்களாக இருக்க மாட்டார்கள் மனிதாபிமானத்துடன் நடக்கலாம்


குமார் மணியன்
டிச 01, 2024 22:40

சுற்றுலாப்பயணிகள் மூணாறுக்குச் செல்வதைத் தவிர்த்தால், கேரள அரசே நடவடிக்கை எடுக்கும்.


jesu raj
டிச 01, 2024 19:43

Rate over refund.


Saravana Mariyappan
டிச 01, 2024 13:34

கேரளாவில் இப்படி நடக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .


Selva Kumar
டிச 01, 2024 12:33

Rate over pls refund


ARUMUGAMPILLAI ARUMUGAMPILLAI
டிச 01, 2024 11:54

Even you can fix Rs/=700 for one IDLY during season time for tourists since you are supposed to face the off season situation . How the tourists will bear your hardships facing at your place by blaming off season...its absolutely from nature...you have to overcome from yourself otherwise the tourists wont come in the next time...


Veeramani A
டிச 01, 2024 11:04

மூணாறு போயி தான் இட்லி சாப்பிடணுமா ஏன் நம்ம காவிரி ஆறு, வைகை ஆற்றங்கரைல சுத்தி பாத்துட்டு ஜம்மு னு ஒரு குளியல் போட்டு ஒரு சாதாரண கூரை கடை ல இட்லி சாப்பிட்டா உங்க சாமி ஏத்துக்காதா??


Nandhu Nandha
டிச 01, 2024 18:35

மூணாறு எப்போ சாமி கும்பிடற இடம் ஆச்சி. அது குளிர்பிரதேசமே


karthik
நவ 30, 2024 13:40

அச்சச்சோ பிஜேபி ஆளும் மாநிலத்தில் பார்த்தீர்களா என்று உருட்ட முடியாதே


VENKATASUBRAMANIAN
நவ 30, 2024 06:59

எல்லா நெடுஞ்சாலை ஹோட்டல்களில் இதைவிட அதிகமாக கொள்ளை அடிக்கிறார்கள்.


கிஜன்
நவ 30, 2024 06:19

கொஞ்சம் மூணாறை தாண்டி ....அந்தப்பக்கம் இறங்கினீர்கள் என்றால் ....பீப் தவிர எதுவுமே கிடைக்காது .... வசதி எப்படி ?


visu
டிச 04, 2024 15:38

அப்படியா


சமீபத்திய செய்தி