உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேலும் ஒரு காட்டு யானை பிடிப்பு

மேலும் ஒரு காட்டு யானை பிடிப்பு

ஹாசன்: ஹாசனில் மேலும் ஒரு காட்டு யானையை, கும்கிகள் உதவியுடன், வனத்துறையினர் பிடித்தனர்.ஹாசன் பேலுார் தாலுகாவில் உள்ள கிராமங்களில், அட்டகாசம் செய்யும், காட்டு யானைகளை பிடிக்க, எட்டு கும்கிகள் கடந்த 12ம் தேதி, அழைத்து வரப்பட்டன. 13ம் தேதி பேலுார் அருகில், நல்லுாரு கிராமத்தில் சுற்றிய, ஒற்றை காட்டு யானை பிடிக்கப்பட்டது. கும்கியான அபிமன்யு தலைமையில், காட்டு யானை பிடிக்கும் பணி தொடர்ந்து நடந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் பேலுார் அருகில், சிக்கோடி கிராமத்தில் கூட்டத்தில் இருந்து பிரிந்து, யானை தனியாக சுற்றுவதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. கும்கிகளை அழைத்துக் கொண்டு, வனத்துறையினர் சென்றனர். காபி தோட்டம் அருகில் நின்ற காட்டு யானை மீது, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர்.ஆனால் மயக்கம் அடையாத, காட்டு யானை அங்கிருந்து பிளிறியபடி ஓடியது. ஒரு கிலோ மீட்டர் துாரம் வரை சென்று, மயங்கி விழுந்தது. அங்கு சென்ற வனத்துறையினர் மயங்கிக் கிடந்த யானையை கயிறால் கட்டினர். மயக்கம் தெளிந்ததும் யானை, ஆக்ரோஷமாக பிளிறியது. கும்கிகள் ஆசுவாசப்படுத்தின. அதன்பின் கும்கிகள் உதவியுடன், காட்டு யானையை லாரியில் ஏற்றிய வனத்துறையினர், அதை முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்