உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக வலைதள பதிவுக்காக சிறையில் அடைப்பதா: மாஜிஸ்திரேட்களுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சமூக வலைதள பதிவுக்காக சிறையில் அடைப்பதா: மாஜிஸ்திரேட்களுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் சமூக வலைதள பதிவுக்காக ஒருவரை சிறையில் அடைத்தால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுகின்றன. இவ்வாறு கருத்து பதிவிடுவோரை கைது செய்து சிறையில் அடைப்பதும் நடக்கிறது.இவ்வாறு சமூக வலைதள பதிவுக்காக ஒருவர் மீது புகார் தரப்பட்டால் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.அதையும் மீறி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், அதைத் தடுக்க ஆந்திரா உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. மாஜிஸ்திரேட்களுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் : சமூக வலைதள பதிவுகளுக்காக ஒருவரை சிறையில் அடைக்கும் போது, அது தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக வலைதள பதிவுகளுக்காக ஒருவரை இயந்திரத்தனமாக சிறையில் அடைத்து விடக்கூடாது. சமூக வலைதள பதிவுகள் அல்லது கமெண்ட் பதிவுக்காக ஒருவரை சிறையில் அடைக்கும் போது, உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி உள்ளோமா என்று தங்களுக்கு தாங்களே ஆய்வு செய்து திருப்தி அடைந்த பிறகு, அதை செய்ய வேண்டும். கைது செய்யப்படாவிட்டால், ஒருவர் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று உறுதியாக நம்பினால் மட்டுமே சிறையில் அடைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத மாஜிஸ்திரேட்டுகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

visu
ஜூலை 07, 2025 21:42

இது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தீர்ப்பு


ramesh
ஜூலை 07, 2025 20:10

திராவிடன் என்ற இனத்தை பழித்து திருட்டு திராவிடன் என்று இங்கே கூறுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும் தெரிவியுங்கள்


மதுரை வாசு
ஜூலை 08, 2025 00:25

முதலில் தமிழன் என்று சொல்ல பழகுங்கள். அதன்பிறகு திராவிடம்.பற்றி பேசலாம்


visu
ஜூலை 08, 2025 10:36

முதலில் திராவிடன் என்ற இனம் எது சொல்லு


தாமரை மலர்கிறது
ஜூலை 07, 2025 19:47

சமூகவலை தளத்தில் பொய் தகவல்களை பரப்பினால் சிறையில் அடைப்பதில் எந்த தவறும் இல்லை.


Sudha
ஜூலை 07, 2025 19:24

நீதி மன்றங்கள் திண்ணை பேச்சு மன்றங்கள் ஆகிவிட்டன. இந்திய இறையாண்மையை மத வக்கிரங்களை பதிவிசும் கயவர்களுக்கு என்ன தண்டனை என்று சொல்லி தொலையுங்கள். பொன்முடிக்கு உபயோகப்படும். மொத்த திமுகவுக்கும் மொழிப்பிரிவினை மாநில பிரிவினை pesum போது என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்


GMM
ஜூலை 07, 2025 18:47

சமூக வலைதளங்களில் பதிவு. அதே மாநிலத்தில் வழக்கு விசாரிக்கும் போது, ஆளும் கட்சி அழுத்தம் இருக்கும். மனுக்களின் குறைபாடு சுட்டி காட்டி, தீர்வு வேறு மாநில நீதிமன்றம் வழங்கினால் குற்ற சாட்டு குறையும். மேலும் பிரிண்ட் மீடியா போல் சமூக வலைதளங்களின் பதிவாளர், முகவரி, ஆதாரம் அல்லது யூக கருத்து பற்றி ஒவ்வொரு பக்கத்திலும் தெரிவிக்க வேண்டும். அரசியல் சாதி, மத போன்ற கருத்துகளை 1 மாத இடைவெளி விட்டு வெளியிட வேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 07, 2025 18:10

கைது செய்யப்படாவிட்டால், ஒருவர் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று உறுதியாக நம்பினால் மட்டுமே சிறையில் அடைக்க வேண்டும் - ஆமா, கமெண்ட்டை பதிவுசெய்யும்போது சாட்சிகளை வைத்துக்கொண்டுதான் பதிவு செய்கிறார்களா? என்ன இது வழவழவென்று ஒரு உத்தரவு?


SUBBU,MADURAI
ஜூலை 07, 2025 18:09

இதே கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற நீதியசர்கள் இந்த திராவிட மாடல் அரசை கேட்டால் எப்படி இருக்கும்? நீதிபதிகள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல என்று கட்டுமர கருணாநிதி கேள்வி கேட்டது இப்போது நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.


ManiK
ஜூலை 07, 2025 18:09

இங்க திமுக ஆட்சியில ஜெயிலுக்கு அனுப்பி உடனே குண்டர் சட்டம் போன்ற கட்டுக்கதை கேஸ் போடும் அராஜகத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக நீதிமன்றங்களிடம் கோஞ்சம் எடுத்து சொல்லுங்க.


rama adhavan
ஜூலை 07, 2025 19:42

நோ யூஸ். No ரூல்ஸ் here.


மணி
ஜூலை 07, 2025 18:00

இது தமிழகத்துக்கும் பொருந்து மா?


Amar Akbar Antony
ஜூலை 07, 2025 18:17

மேற்கோள் காட்டலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை