உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற வேண்டும்; ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற வேண்டும்; ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

கடப்பா: ''நாட்டில் புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்,'' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கடப்பா மாவட்டத்தில், தெலுங்கு தேசம் துவங்கி, 43 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மூன்று நாள் மாநாடு நேற்று துவங்கியது.இதில் பங்கேற்று, அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடு பேசியதாவது:நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும், மக்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி, தெலுங்கு தேசம் தான். தற்போது, மத்திய அரசு எடுக்கும் பல்வேறு முடிவுகளில், நம் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோமோ, அதை அடுத்த நாளே மற்ற மாநிலங்களும் செய்கின்றன.அனைத்து துறைகளிலும் நாட்டுக்கே முன்னுதாரணமாக ஆந்திரா விளங்குகிறது. வளர்ச்சி, மேம்பாடு, சீர்திருத்தம் ஆகியவற்றை தாரக மந்திரமாக வைத்து, நாங்கள் செயலாற்றி வருகிறோம். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க, 500 - 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும்படி, கடந்த காலத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தினேன்.கடந்த 2016ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற மத்திய அரசு, புதிதாக 500 - 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இதில், 2,000 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை. தற்போதைய நவீன தொழில்நுட்ப கட்டத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து விட்டன. எங்கு பார்த்தாலும், ஆன்லைனிலேயே பணப் பரிமாற்றம் நடக்கிறது.இதனால், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு அவசியம் ஏற்படவில்லை. இதை கருதி, புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இது அரசியலுக்கு நிச்சயம் பயனளிக்கும். கருப்பு பணத்தை ஊக்குவிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Bahurudeen Ali Ahamed
மே 29, 2025 11:42

இந்திய ரூபாய் பண வீக்கத்தின் காரணமாக மதிப்பிழந்து வருகிறது அமெரிக்க டாலரின் மதிப்பை 40 க்கு கொண்டுவருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தார் அதுவும் தொடர்ந்து மூன்று முறை ஆனால் இன்று 85ஐ கடந்து செல்கிறது பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு குறைப்பேன் என்றார் ஆனால் நடந்ததென்ன அனைத்தும் இருமடங்காகிவிட்டது இதைப்பற்றியெல்லாம் பேசமாட்டார் ஆனால் ஏற்கனவே பெயிலியர் ஆன விஷயத்தை திரும்ப செய்யச்சொல்லி வலியுறுத்துவார் இதையும் வரவேற்க சிலபேர்


ஜெய்ஹிந்த்புரம்
மே 28, 2025 20:59

500 ரூபாயை திரும்ப பெற்று, அதற்கு பதிலாக மீண்டும் 2000 ரூபாயை வெளியே விட சூசகமாக நாயுடு நூல் விடுகிறாரா? நெறைய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றமுடியாமல் குடவுனில் இன்னும் பதுக்கி வைத்துள்ளாரோ என்னவோ, பாவம்


ஜெய்ஹிந்த்புரம்
மே 28, 2025 20:56

இந்த மாதிரி முட்டாள்தனமான செயலை மோடி அரசில் செய்யமாட்டார்கள் என்ற தைரியத்தில், நல்லவன் போல நாடகம் போட இப்படி உதார் உருட்டுகளை நாய்டு சொன்னாலும் உள்ளுக்குள் உதறல் இருக்கும். எல்லா பணத்தையும் புது தலைநகரின் ரியல் ஸ்டேட்டில் போட்டுள்ளாரா, இல்லை கிரிப்டோ கரன்சியும் டாலருமாக மாற்றி வைத்துள்ளாரா?


முருகன்
மே 28, 2025 19:30

அனைத்தையும் மாற்றி விட்டார்கள் போலவே தோன்றுகிறது


மூர்க்கன்
மே 28, 2025 16:56

கம்யூனிஸ்ட்களிடம் கூட ஐநூறு ரூபாய் தாள்கள் இருக்கிறதாம் ஆனா பாருங்க பக்தாள் கிட்ட மட்டும் எந்த தாளும் இல்லையாம் இத நாம நம்பணுமாம் சாய் ரொம்பவே சாய்ஞ்சு பொய் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்.


P. SRINIVASAN
மே 28, 2025 16:49

இவரே பெரிய ஊயல்வாதி.. இவர் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல.


Saai Sundharamurthy AVK
மே 28, 2025 16:23

திமுக, காங்கிரஸ், கம்முனிஸ்ட் கட்சிகளிடம் ஏகப்பட்ட கருப்பு பணம் 500 ரூபாய் கட்டுகள் உள்ளது. ஏகப்பட்டவை பதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, நிச்சயம் 500 ரூபாயை டிமானிடைஷ் செய்ய வேண்டும். எப்படியோ சந்திரபாபு நாயுடு இந்த விஷயத்தை தெரிந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு ஜே !


Anantharaman Srinivasan
மே 28, 2025 15:54

சந்திரபாபு நாயுடுவிடம் கருப்பு பணமே கிடையாது. நம்புங்க ..100 தாள்கள் தான் ஏகத்துக்கு அடுக்கி வைத்துள்ளாராம். உஷார் பார்ட்டி..


bharathi
மே 28, 2025 15:33

mine is all in crypto...Naidu Garu techy


jana
மே 28, 2025 15:16

ரூ 2000 கொண்டு வந்தாரே அறிவாளி ஒருத்தர் அப்போ தூங்கிட்டிங்களா நாயுடு


சமீபத்திய செய்தி