உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு: ஆந்திர எம்.பி., அறிவிப்பு

3வது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு: ஆந்திர எம்.பி., அறிவிப்பு

அமராவதி: ஆந்திராவில் 3வதாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு அளிக்கப் போவதாக அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., அறிவித்துள்ளார். பெண் குழந்தை பெற்றால் ரூ.50 ஆயிரமும், ஆண் குழந்தை பெற்றால் பசு மாடும் அளிப்பதாக கூறியுள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறுகையில், மக்கள் தொகை குறித்து கவனம் செலுத்த வேண்டும். தென் மாநிலங்களில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி உள்ளது. வட மாநிலங்களில் மட்டும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் தொகை அதிகமாக இருந்தால் தான், பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும். மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.சமீபத்தில், குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு விடுமுறை அளிக்கவும் சந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். முன்பு இரண்டு குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது எத்தனை குழந்தை பெற்றுக் கொண்டாலும் அந்தச் சலுகை அளிக்கப்படும் எனக்கூறியிருந்தார்.இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த விஜயநகரம் தொகுதி எம்.பி., காளிசெட்டி அப்பலநாயுடு , பெண்கள் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு வழங்கப்படும். 3வதாக பெண் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பசு மாடும் பரிசாக வழங்குவேன். நிதியுதவியை எனது சம்பளத்தில் இருந்து வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.அப்பல நாயுடுவில் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதனை தெலுங்கு தேசம் கட்சியினர் மறுபதிவு செய்து வருகின்றனர். இந்த அறிவிப்பு புரட்சிகரமானது என பெண்கள் தெரிவிப்பதாக தெலுங்கு தேசம் கட்சியினர் கூறியுள்ளனர். அப்பல நாயுடுவிற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
மார் 10, 2025 18:28

ஆந்திராவும் வட இந்தியாவுடன் போட்டி போடுவது என்று முடிவு செய்து விட்டார்கள் போல் உள்ளதே!


VSMani
மார் 10, 2025 10:36

ஏற்கெனவே மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்குது. இந்த லட்சணத்தில் ஆந்திரா அநேக பிள்ளைகளை பெற்றால் இந்தியா நிலைமை என்ன ஆகும்? ஒவ்வொரு மாநிலமும் இதே போல் அநேக பிள்ளைகளை பெறுபவர்களுக்கு பரிசு என்று அறிவித்தால் பிறகு நாடு என்ன ஆகும்?


Palanisamy T
மார் 10, 2025 03:01

இந்த ஆந்திர MP யின் அறிவிப்பை தமிழகம் முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவேண்டும். இன்றைய போக்கில் தமிழகம் சென்றால் நாளை தமிழகத்தில் தமிழர்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.


Appa V
மார் 09, 2025 23:57

எலான் மாஸ்க் வெவ்வேறு பெண்மணிகள் மூலம் 14 குழந்தைகளுக்கு தந்தை ..


Oru Indiyan
மார் 09, 2025 23:23

இரட்டை குழந்தைகள் பெற்றால், என்ன பரிசு தருவார்?


Thiagaraja boopathi.s
மார் 09, 2025 23:22

சூப்பர்


B MAADHAVAN
மார் 09, 2025 23:12

நிச்சயமாக இந்த பரிசுகள் இந்துக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.பரிசு கொடுப்பவர்களு்க்கும், பரிசு பெறுபவர்களுக்கும் வாழ்த்துக்கள்..


Venkatesan Srinivasan
மார் 09, 2025 22:25

இது உண்மையில் தற்போதைய மாறிவரும் சமூக இளம் தலைமுறையினர் ஜாதி மத இன சமன்பாடுகள் குறித்த ஒரு நல்ல விழிப்புணர்வு. 1960 - 1980 களில் மேற்கொண்ட கடுமையான குடும்ப கட்டுப்பாடு கொள்கைகளினால் மேற்கூறிய காரணிகளில் எத்தகைய சமன்பாடு இன்மை ஏற்பட்டது என்பதின் மறு ஆய்வு. சில குறிப்பிட்ட சமூக பிரிவினர் அரசின் கொள்கை முடிவுகள் மேல் அக்கறை கொள்ளாததும் அதுவே பிற சமூகத்தினர் அவற்றை உறுதியாக கடைபிடித்ததும் சமூகங்களிடையே முரண்பட்ட எதிர்மறை நிலைப்பாடு உண்டாக காரணமாகும். இவற்றை நாம் உணரும் போது சுமார் இரண்டு மூன்று தலைமுறைகள் தாண்டி விட்டது. இனி வரும் காலங்களில் இத்தகைய தேசிய கொள்கை முடிவுகள் வகுக்கும் போது ஆட்சியாளர்கள் சமன்பாடுகள் மாறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ் தமிழகம்.


ஆரூர் ரங்
மார் 09, 2025 22:16

என்ன பரிசு? பெரும்பாலும் தொப்பியாகத்தான் இருக்கும். வேறு யாரும் இவரது பேச்சைக் கேட்டு மூன்றாவதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள்


முக்கிய வீடியோ