உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: ஜெகன் மோகன் மீது சந்திரபாபு பகீர் குற்றச்சாட்டு

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: ஜெகன் மோகன் மீது சந்திரபாபு பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: முந்தைய ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார்.ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தற்போதைய முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சந்திரபாபு பேசியதாவது: திருப்பதி கோயில் நமது புனிதமான கோயில்களில் ஒன்று. இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பிரசாதங்கள் தரமற்று இருந்தன. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு ஜெகன்மோகனும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
செப் 19, 2024 01:06

எப்பிடிக் கண்டுபிடிச்சீங்க? ஜெகனை தூக்கி உள்ளே வெச்சு களி திங்க வெக்க வேண்டியதுதானே?


தமிழ்நாட்டுபற்றாளன்
செப் 18, 2024 23:19

என்னவோ இது புதுசு போல , எல்லாரும் உட் கொள்ளும் மாத்திரை எல்லாம் கெலட்டின் என்கிற தில் இருந்து தான் செய்யப்படுகிறது , அந்த கெலட்டின் பன்றி மாட்டு கொழுப்புஇல் இருந்துதான் வருது என்ன இப்ப


Jysenn
செப் 18, 2024 23:07

If this claim of Naidu is true stringent action must be taken against the culprits who has intentionally violated not only the sanctity of the temple Prasad but also hurt the sentiments of crores of Hindus.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை