உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாஜவில் இருந்து விலகினார் அண்ணாமலை

பாஜவில் இருந்து விலகினார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாஜவில் இருந்து அண்ணாமலை விலகினார்; அவர் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின் நபினிடம் ஒப்படைத்தார். பாஜவில் தனக்கு பதவி எதுவும் வழங்கப்படாததால், அதிருப்தியில் உள்ள அண்ணாமலை, தனியாக கட்சி தொடங்க உள்ளதாக, தகவல் பரவியது. இந்தசூழ்நிலையில், அவரை பா.ஜ., டில்லி மேலிடம் அழைத்தது. எனவே, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பதற்காக, நேற்று சென்னையிலிருந்து விமானத்தில், டில்லி புறப்பட்டு சென்றார்.டில்லியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் அண்ணாமலை தங்கி இருக்கிறார். இந்நிலையில் இன்று (ஜூன் 02) பாஜ தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார். அப்போது பாஜவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின் நபினிடம் ஒப்படைத்தார்.

இன்று இரவும் பேச்சுவார்த்தை!

இது குறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பாஜவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ் ஆகியோரையும் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். தனது ராஜினாமா தொடர்பான விவகாரங்கள் குறித்து அவர் இச்சந்திப்புகளில் ஆலோசனை நடத்தினார். அமித் ஷாவுடனான சந்திப்புடன் இந்த ஆலோசனைகள் நிறைவடைந்தன. அண்ணாமலையின் ராஜினாமா விவகாரம் குறித்து விவாதித்தனர்; இருப்பினும் அண்ணாமலை இதுவரை தனது ராஜினாமா கடிதத்தை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை. இன்று இரவு பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின், அண்ணாமலை ஆகியோர் இதே விவகாரம் குறித்து மேலும் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் அண்ணாமலை தமிழகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தனர்.

யார் இந்த அண்ணாமலை

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள தொட்டம்பட்டியில் 1984ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி அண்ணாமலை பிறந்தார். 2011ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று, கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றினார்.2020ல் பாஜகவில் இணைந்த அவர், 2021ல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியிலும் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியடைந்தார்.2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். ஆனாலும் தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் இன்று பாஜவில் இருந்து விலகினார்.

முன்பே கணித்த தினமலர்!

தனிக்கட்சி துவங்க அண்ணாமலை முடிவு; பெருந்துறை தொகுதியில் போட்டி? என்ற தலைப்பில் நேற்றைய தினம் (ஜூன் 01) நமது தினமலர் நாளிதழ் மற்றும் வெப்சைட்டில் செய்தி வெளியாகி இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் இடம் வழங்கி இருக்கிறார். தற்போது புதிய கட்சி துவங்குவது குறித்து எப்பொழுது அண்ணாமலை அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.முன்பே கணித்து தினமலர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்https://www.dinamalar.com/news/premium-news/annamalai-decides-to-start-a-separate-party-contest-in-perundurai-constituency/4235780

அமித் ஷா உடன் சந்திப்பு

பாஜ கட்சியில் இருந்து விலகுவது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வீட்டில் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் அண்ணாமலை.

அடுத்த கட்டம்!

பாஜவில் இருந்து விலகி உள்ள அண்ணாமலை, வரும் 15ம் தேதிக்குள் புதிய கட்சி தொடங்க உள்ளார். அக்கட்சி சார்பில், பெருந்துறை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார். தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில், இன்னும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அத்தேர்தலில், பெருந்துறை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடவும் வாய்ப்புள்ளது என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 216 )

Venkat
ஜூன் 21, 2026 06:42

அமிதாஷாவின் ட்ராமா


Dominic
ஜூன் 20, 2026 14:04

Because of bjp, and its contnuous vitamin.M.he pulled crowd. Now no more Bjp, And there is no big true followers with him. His stake 16 lacs followers r fake. Vijay wave thrown Chieeman like manipulators from tamil nadu political arena. Net time any election, Anna malaii will realize his strength. ZlI


S.V.Srinivasan
ஜூன் 04, 2026 10:18

பி ஜே பி தமிழகத்தில் வளர வேண்டாம் என்று அதன் தலைமையே முடிவு செய்து விட்ட பின், யாரால் என்ன செய்ய முடியும். கூடா நட்புடன் சேர்ந்து 2021 இல் கிடைத்த 4 எம் எல் ஏ தொகுதிகளையும் 2026 இல் பலி கொடுத்தாச்சு. பி ஜே பி யின் தமிழகத்தின் தலைவர்கள் யாரும் கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் கிடையாது . இனி தமிழகத்தில் தாமரை மலரும் என்பது கனவுதான்.


MARUTHU PANDIAR
ஜூன் 03, 2026 20:51

அண்ணா அமலை அவர்களே. உங்களைப் போன்ற ஒரு முதிர்ச்சியான இளைஞர் தமிழக அரசியல் களத்தில் யாருக்கோ கீழ்ப் படிந்து செயலாற்றினால் காலம் உருண்டோடி விடும். நோக்கம் நிறைவேறாது. உங்கள் முந்தைய நடை பயணங்ககள் மக்களால் மறக்கப் பட வில்லை. உங்கள் அரசியல் பயணம் தொடர்க. திராவிடதை மீண்டும் எழ விட வேண்டாம்


V Narayanan
ஜூன் 03, 2026 05:19

ஒரு நல்ல முடிவு .ஒரு வருடம் முன்பே தயார் என்று செய்தி உள்ளது .இப்போ இடைத்தேர்தல் வருகிறது நிற்பாரா/நிறுத்துவாரா ?. அதை வைத்து முடிவு செய்யலாம் .


Srinivasan M
ஜூன் 03, 2026 04:02

bjp sidelined and insulted him in many ways. this decision is a delayed one.


ஆகுயர்த்தோன்
ஜூன் 03, 2026 00:31

இவருக்கு இவ்வளவு BUILT UP தேவையா என்று தெரியவில்லை


MARUTHU PANDIAR
ஜூன் 03, 2026 19:30

உனக்கு எங்கெல்லாம் எரியுது சொல்லு. "" அப்பா "" வை அவர்கள் மொழியில் "...... ஊடகங்கள் " என்று சொல்லப்பட்ட பாவப்பட்ட ஊடகங்கள் அவுரு செய்யாத சாதனைகளை செஞ்சதா செல்லி தினம் 100 வாட்டி ஒளி பரப்பி ,,கொடுத்த பில்டப்பை விடவா?


MARUTHU PANDIAR
ஜூன் 03, 2026 19:40

எடப்பாடி என்ற மண் குதிரை பாஜவை கீழே தள்ளி மிதித்தும் துவம்சம் செய்து விட்டது. இனி பாஜவும் எழ முடியாது எடப்பாடியயம் எழ முடியாது. திராவிட குட்டையில் தமிழகம் மூழ்கி அழுகை வேண்டாமென்றால் அண்ணாமலை ஒருவரால் தான் அது முடியும். மண் குதிரைக்காக பாய்ச்சல் குதிரையை கை விட்ட பாஜவுக்கு தமிழகத்தில் இனி எதிர்காலம் கிடையாது.


தமிழ்நாட்டின் நலம்விரும்பி
ஜூன் 02, 2026 23:57

ஆகச்சிறந்த படிக்காத மேதை ஐயா. மாண்புமிகு. காமராஜர் அவர்கள் ஆட்சி செய்து நல்லாட்சி தந்தது போல்.. தற்சமயம் தமிழ்நாட்டிற்கு தேவை... ஆகச்சிறந்த படித்த மேதை அண்ணன் அண்ணாமலை IPS அவர்கள்... நீங்க வாங்க அண்ணா நீங்க வந்து தமிழ்நாட்டிற்கு விடியல் தாங்க..


விருமாண்டி
ஜூன் 03, 2026 05:30

அதுக்கு தேர்தலில் கெலிக்கணும் தும்பி.. அதுக்கு ஐபிஎஸ்க்கு தைரியம் இல்லை. வாய் மட்டும் தான்.


வில்லிபுத்தூரான்
ஜூன் 03, 2026 12:39

இருந்தாலும் ஹிந்துக்களையும் திராவிட எதிர்ப்பு சக்திகளையும் அன்ணாமலை ஒருங்கிணைப்பார்.


S. Venugopal
ஜூன் 02, 2026 22:54

திரு ஹெச் ராஜா அவர்களுக்கு மான்புமிகு பிரதமர் தேர்தலுக்குப்பின் நல்ல செய்தி வரும் என்று கூறியதை அவருக்கு அந்த நல்ல செய்தியினை வரவிடாமல் தடுக்க நாடகமா ?


GUNA SEKARAN
ஜூன் 02, 2026 22:46

இன்னமும் உறுதியாகாத ஒரு செய்தி. பார்ப்போம். தமாகவில் இணைந்து உயர்த்தி உயரலாம். GK வாசன் போன்றவர்களெல்லாம் அதிகாரத்திற்கு வர வேண்டும். ஐயா தமிழருவி மணியன் அவர்களுக்கு மரியாதை தர வேண்டும்.


முக்கிய வீடியோ