உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 9-வது நாளாக தொடரும் ஹசாரே அறப்போராட்டம்

9-வது நாளாக தொடரும் ஹசாரே அறப்போராட்டம்

புதுடில்லி: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே இன்றுடன் தனது 9-வது நாள் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்கிறார். ஊழல்வாதிகளை தண்டிக்க ஜன்லோக்பால் மசோதா தேவை என்பதில் உறுதியாக உள்ளார். இந்நிலையில் ஹசாரேயின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் ‌தெரிவிக்கின்றனர். போதிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு டாக்டர்கள் வற்புறுத்தினர் ஆனால் அவர் மருந்து உட்கொள்ள மறுத்து வருகிறார். இது குறித்து ஹசாரேயின்‌ நெருங்கிய உதவியாளர் மனீஸ்சி‌சோடியா கூறுகையில், ஹசாரேயின் ரத்த அழுத்தம் குறைந்துவருகிறது. நேற்றுடன் அவரது எடை 66 கிலோ வரை குறைந்துள்ளது. தொடர்ந்து டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அன்னாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குழுவைச் சேர்ந்த மாஜி ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்‌பேடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை