உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வர்த்துார் பிரகாஷ் தோழி மீது மேலும் ஒரு மோசடி வழக்கு 

வர்த்துார் பிரகாஷ் தோழி மீது மேலும் ஒரு மோசடி வழக்கு 

பெங்களூரு: பா.ஜ., முன்னாள் அமைச்சர் வர்த்துார் பிரகாஷ் தோழி ஸ்வேதா மீது, மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவாகி உள்ளது.பெங்களூரு கமர்ஷியல் தெருவில் நகைக்கடை நடத்தி வரும், சஞ்சய் பாப்னா என்பவரிடம் இருந்து 2.42 கோடி ரூபாய்க்கு நகை வாங்கி, பணம் கொடுக்காமல் மோசடி செய்த வழக்கில், பா.ஜ., முன்னாள் அமைச்சர் வர்த்துார் பிரகாஷ் தோழி ஸ்வேதா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வர்த்துார் பிரகாஷும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.இந்நிலையில், ஷிவமொக்காவை சேர்ந்த, நகை வியாபாரி பால்ராஜ் சேட் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசும் அவர், நகைக்கடை நடத்தும் சஞ்சய் பாப்னாவும், நானும் கோடிக்கணக்கில் பிசினஸ் செய்கிறோம். சஞ்சய் மூலம் எனது ஸ்வேதா அறிமுகம் கிடைத்தது. நான், நகை வியாபாரி. நகையில் பல டிசைன்கள் போட்டு கொடுக்கும் தொழிலும் செய்கிறேன். நான் டிசைன் போட்ட 285 கிராம் எடையுள்ள தங்க நகை ஸ்வேதாவுக்கு பிடித்து இருந்தது. அதை வாங்கி கொள்வதாக கூறினார்.பெங்களூரில் வசிக்கும் எனது சகோதரர் மூலம், நகையை, ஸ்வேதாவிடம் ஒப்படைத்தேன். அந்த நகையின் மதிப்பு 20 லட்சம் ரூபாய். அவர் 16 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். 4 லட்சம் ரூபாயை பின்னர் தருவதாக கூறினார். காசோலையை வங்கியில் சென்று மாற்ற முயன்ற போது, காலாவதியானது என்று தெரிந்தது. ஸ்வேதைாவை தொடர்பு கொண்ட போது மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டார் என்றார்.இந்நிலையில் நேற்று ஸ்வேதா மீது, கமர்ஷியல் தெரு போலீசில், பால்ராஜ் சேட் புகார் செய்தார். புகாரின்படி, ஸ்வேதா மீது வழக்கு பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை