ஒரே மாதத்தில் வேற லெவல்; சர்வதேச செஸ் தரவரிசையில் பிரக்ஞானந்தா முன்னேற்றம்!
புதுடில்லி: சர்வதேச செஸ் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் வந்த பிரக்ஞானந்தா, ஒரே மாதத்தில் 17 புள்ளிகள் பெற்று 14வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் தரவரிசை பட்டியல் வெளியானது. நார்வேயின் கார்ல்சன் (2833 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். நடப்பு உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ் (2787), கூடுதலாக 10 புள்ளி பெற்று, இரண்டு இடம் முன்னேறி, 'நம்பர்-3' ஆக உள்ளார். பேபியானோ காருணா (அமெரிக்கா, 2783) 4வது இடத்துக்கு சென்றார். சமீபத்திய போட்டிகளில் ஏமாற்றிய இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (2777), 24 புள்ளிகளை இழந்து, 5வது இடம் பெற்றார். பிரக்ஞானந்தா (2758), 17 புள்ளி அதிகம் பெற் றார். தரவரிசையில் 6 இடம் முன்னேறிய இவர், 8வது இடம் பிடித்துள்ளார். மற்ற இந்திய வீரர்கள் ஆனந்த் (14, 2743), அரவிந்த் சிதம்பரம் (22, 2732), விதித் குஜ்ராத்தி (24, 2720), 'டாப்-25' பட்டியலில் உள்ளனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஹம்பி (2528, 6வது), 'டாப்-10' பட்டியலில் உள்ளார். வைஷாலி (2484, 14), ஹரிகா (2483, 16) அடுத்து உள்ளனர்.