உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அல் பலாஹ் மருத்துவ கல்லூரி டாக்டர் மாயம்: பயங்கரவாத தொடர்பால் பணி நீக்கம் செய்யப்பட்டது அம்பலம்

அல் பலாஹ் மருத்துவ கல்லூரி டாக்டர் மாயம்: பயங்கரவாத தொடர்பால் பணி நீக்கம் செய்யப்பட்டது அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரிதாபாத்: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அல் பலாஹ் மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய மற்றொரு டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே வெடிமருந்து விவகாரத்தில் 3 டாக்டர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு டாக்டரின் பெயரும் வெளியாகியுள்ளது. இவர் காஷ்மீரில் பயங்கரவாத தொடர்பு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.நிசார் உல் ஹசன் என்ற அந்த டாக்டர், பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் மருத்துவ கல்லூரியில் தங்கி பணியாற்றியதுடன் அங்கேயே படித்து வந்தார். டில்லியில் கார் வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மாயமாகிவிட்டதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த அல் பலாஹ் தொண்டு நிறுவனம், கல்லூரி வளாகத்தில் தான் அவர் உள்ளார். அவரிடம் பாதுகாப்பு அமைப்பினர் விசாரணை நடத்தியதாக தெரிவித்தது. இருப்பினும், நிசார் உல் ஹசன் கல்லூரி வளாகத்தில் இல்லை எனவும், அவரை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1mbeh544&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

யார் இவர்

காஷ்மீரின் பாரமுல்லாவின் சோபோர் பகுதியைச் சேர்ந்த நிசார் உல் ஹசன், காஷ்மீர் டாக்டர் சங்கத் தலைவராக இருந்தார். பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்தார். ஸ்ரீநகரில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், பயங்கரவாத தொடர்பு காரணமாக 2023ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்து கவர்னர் உத்தரவிட்டார். இதன் பிறகே அவர் ஹரியானாவில் உள்ள அல்பலாஹ் மருத்துவ கல்லூரியில் பணியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தொடர்புடைய வெடிமருந்து விவகாரத்தில் இவருக்கு பங்கு இருக்கும் என உளவுத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மகளிடம் விசாரணை

நிசார் உல் ஹசன் தலைமறைவானதைத் தொடர்ந்து அவரது மகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ramesh Sargam
நவ 13, 2025 00:53

Why the government is yet to demolish that medical university? It should have been by now bombed and demolished .


மணிமுருகன்
நவ 12, 2025 23:49

அல் பலாஹ் மருத்துவ கல்லூரி பொய்யான தகவலை ஏன் தநிதது நீக்கப்பட்ட மரித்திவரை எப்படி அநடத மருத்துவ கல்லூரி பணியில் சேர்த்தது அந்தக் மருத்துிவ கல்லூரியையும் விசாரணை வளையத்தில் கொண்டு கண்காணிப்பது நன்று


Sun
நவ 12, 2025 23:28

அல் பலாஹ் மருத்துவக் கல்லூரி ! கல்லூரியின் பெயர் மிக அழகாக, நன்றாக உள்ளது.


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2025 23:16

இப்போ கர்நாடகாவில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அரசு வேளையில் உள்ளார்கள் , நம்பலாமா?


Nathansamwi
நவ 12, 2025 23:08

அந்த யூனிவர்சிட்டி யை தடை செய்வது நல்லது ...ஆனால் நம்ம கவாய் அதற்கு அனுமதி அளிக்க மாட்டார் ...


Chandhra Mouleeswaran MK
நவ 12, 2025 22:09

அது முதலில் அவன் மகளாகவே இருக்காது அவனுக்கு ப்ரைன் வாஷ் செய்ய அமர்த்தப் பட்ட கண்ணுக்குட்டியாக இருக்கும் நிச்சயமாக


HoneyBee
நவ 12, 2025 21:58

இந்த சிலரால் அந்த மதத்தின் எல்லோரும் பாதிக்க படுகிறார்கள். ஆனாலும் ஏன் இவர்கள் புத்தி இப்படி கீழ்த்தரமாக போகிறது


V K
நவ 12, 2025 21:53

டாக்டர் சீட் கிடைப்பது பெரிய விஷயம் இந்த தீவிரவாதி டாக்டர் முடித்துவிட்டு நல்ல வேலையில் இருந்து கொண்டு இந்த மாதிரி செயல் ....


சுந்தர்
நவ 12, 2025 21:24

டிஸ்மிஸ் ஆனவரை மீண்டும் சேர்த்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.


Ganesh
நவ 12, 2025 21:24

தீவிரவாதிகளின் குடும்பத்தையே நாடு கடத்த வேண்டும்... பயங்கரவாதிகளை விட பயங்கரவாதி என்று தெரிந்தும் அரசாங்கத்திற்கு தெரிவிக்காமல் இருந்ததற்கு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை