உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய பிரதமரானார் அனுடின்

புதிய பிரதமரானார் அனுடின்

பாங்காக்: தாய்லாந்தின் புதிய பிரதமராக அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், பூம்ஜைதாய் கட்சியின் தலைவருமான அனுடின் சார்ன்விரகுல், 58, தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு, அதன் அண்டை நாடான கம்போடியாவுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது, கம்போடியா முன்னாள் பிரதமர் ஹுன் சென் உடன் தொலைபேசியில் பேசிய தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, தங்கள் நாட்டு ராணுவ தளபதியை தன் எதிரி என குறிப்பிட்டார். இந்த உரையாடல் சமூக வலைதளத்தில் கசிந்தது. நெறிமுறைகளை மீறியதாக வெளியான குற்றச்சாட்டின்படி, நீதிமன்றத்தால் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அரசின் கூட்டணியில் அங்கம் வகித்தவருமான பூம்ஜைதாய் கட்சியின் தலைவருமான அனுடின் சார்ன்விரகுல் தற்போது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ