உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது என்னென்ன கேஸ் இருக்கு? சாட்டையை சுழற்றியது சுப்ரீம் கோர்ட்

தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது என்னென்ன கேஸ் இருக்கு? சாட்டையை சுழற்றியது சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழக அமைச்சர்களில் எத்தனை பேர் மீது என்னென்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து ஏமாற்றியதாக அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் வழக்கின் விசாரணையை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்க வேண்டும், சிறப்பு அரசு தரப்பு வக்கீலை நியமிக்க கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இடையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, வழக்கு தொடர்பான நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டு இருந்தனர்.அதன் பேரில் சீலிடப்பட்ட விவர அறிக்கை ஒன்றை சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் இன்றைய விசாரணையின் போது தாக்கல் செய்தார். அதை வாசித்து பார்த்த நீதிபதிகள் கூறியதாவது; வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 2000க்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. 600 சாட்சிகள் இருக்கின்றனர். மேலும் 23 எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிபதி விசாரிக்க உள்ளதால் பணிச்சுமை இருக்கும். எனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு அவர் தொடர்பான 3 வழக்குகளில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி நியமிக்க முடியுமா? அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.யார் அந்த நீதிபதி என்பதை ஐகோர்ட் தலைமை நீதிபதியே முடிவு எடுப்பார். இதுதொடர்பான அறிக்கையை வரும் 25ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது என்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த விவரங்களையும் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Ramesh Sargam
அக் 01, 2024 20:17

சாட்டையை சுழற்றி என்ன பயன்? விவரங்களை தெரிந்துகொண்டு என்ன பயன்? விரைவாக வழக்குகளை முடித்து தண்டனை நிறைவேற்றுவீர்களா?


சாண்டில்யன்
அக் 01, 2024 14:14

எத்தனை தூங்குதுன்னும் சொல்லுங்கண்ணே


G Mahalingam
அக் 01, 2024 10:04

என்ன புண்ணியம். மொத்தமாக லிஸ்டி வாங்கி தடை விதிக்கவா? 4 அமைச்சர்கள் வழக்கை தடை விதித்து அது எப்போது விசாரணைக்கு வரும் என்றை தெரியவில்லை.


Constitutional Goons
செப் 30, 2024 23:22

மோடி மீதும் இந்நாள் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மீதும் எத்தனால் வழக்குகள் இருந்தது ? அதெல்லாம் என்ன ஆனது. பாஜ மாநில அமைச்சர்கள் மீது எத்தனை உள்ளது ? என்றும் பார்க்கலாம்


ஜலஜா
செப் 30, 2024 22:35

எத்தனை பேர் மேலே எத்தனை வழக்கு இருந்தா என்ன? ஒண்ணுக்கும் தீர்ப்பு வரப்போவதில்லை. நானும் இருக்கேன்னு காட்டிக்கொள்ள அதிரடி கேள்வி.


xyzabc
செப் 30, 2024 21:30

பின்னர் இவர்கள் வெளியே வருவது எப்படி?


Dharmavaan
செப் 30, 2024 21:26

நீதித்துறை செயல்பாடுகள் சிரிப்பாய் சிரிக்கிறது


Sathyanarayanan Sathyasekaren
செப் 30, 2024 21:17

இன்றைய பெரிய ஜோக். இவர்களே ஊழல் அரசியல் வியாதிகளுக்கு ஜாமின் கொடுப்பார்களாம், கீழமை நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் நடத்தி கொடுக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து,, ஊழல் செய்தவர்கள் மீண்டும் மந்திரியாக வசதி செய்வார்களாம், ஜாமின் கொடுத்து அனுப்பிவிட்டு சட்டையை சுழற்றுவார்களாம், யாரை yematrugirargal?


K.SANTHANAM
செப் 30, 2024 21:16

நீதிமன்றங்களில் எந்த வழக்கும் இல்லை என்கிற என்.ஒ.சி யை உச்சநீதிமன்றத்தில் வாங்கினால் மட்டுமே தேர்தல்ல போட்டியிட முடியும் என்ற நிபந்தனையை உச்சநீதிமன்றம் விதிக்க வேண்டும்..அப்ப இதற்கு விடியல் ஏற்படும்.


Raghavan
செப் 30, 2024 21:10

பொன்முடி வழக்கில் தீர்ப்பு கூறியவர் சட்டம் படித்த நீதிபதி அவருக்கு தண்டனை கொடுத்தார். அதே சட்டத்தை படித்த உச்ச நீதி மன்ற நீதிபதி பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு அல்லாமல் அவருக்கு மந்திரி பதவியை ஏற்பதற்கு ஆளுநருக்கே ஆணையிட்டதை என்னவென்று சொல்லுவது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை