உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சை தீர்ப்பு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் சர்ச்சை தீர்ப்பு: தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாலியல் வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.2021ம் ஆண்டு உ.பி.யைச் சேர்ந்த 11 வயது சிறுமியை இரண்டு வாலிபர்கள் லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவானது. இந்த வழக்கில் அண்மையில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ராம்மனோகர் நாராயண் மிஸ்ரா தீர்ப்பளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ielhds76&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தீர்ப்பில், பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. சிறுமியின் ஆடைகளை கிழித்து காயங்கள் ஏற்படுத்தவே முயன்றனர். இது பாலியல் பலாத்கார முயற்சியாக பார்க்க முடியாது. மார்பகத்தை பிடித்து இழுப்பதை கற்பழிப்பு முயற்சி என்று கூற முடியாது என்று கூறி, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். அவரின் இந்த தீர்ப்புக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.இந்நிலையில், அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்நிறுத்தி வைத்துள்ளது. நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறி உள்ளதாவது: இது மிகவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய சம்பவம். உணர்ச்சியற்ற மனநிலையில் இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கி உள்ளதை இது காட்டுகிறது. தீர்ப்பை எழுதியவருக்கு உணர்ச்சியே இல்லை. இதை சொல்வதற்கு எங்களுக்கு வேதனையாக உள்ளது என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Haja Kuthubdeen
மார் 26, 2025 21:36

இவரை போன்றவர்கள் எப்படி உயர்நீதிமன்ற நீதிபதி ஆகமுடியுது!!!!


sankaranarayanan
மார் 26, 2025 19:10

அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்நிறுத்தி வைத்துள்ளது. கணம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களே இதுபோதாது தயவுசெய்து அந்த இரு நீதிபதிகளையும் நீதி மன்றத்திலிருந்தே வாழ்நாள் முழுவதும் நீக்கிவிடுங்கள் இதுபோன்று இனி இந்த நாட்டில் நீதி வழங்கும் நீதிபதிகளுக்கு இது ஒரு முன் உதாரணமாக இருக்கும்


Sdeh
மார் 26, 2025 18:28

நம்ம டெல்லி யஸ்வந்த் சர்மா மச்சானா இருப்பாரோ.


முருகன்
மார் 26, 2025 16:04

இது போன்ற குற்றத்திற்கு அ... வேண்டும்


GMM
மார் 26, 2025 14:52

பாலியல் குற்றம் நாடு முழுவதும் அதிகரிப்பு. அறியா பெண்கள் சிக்கி விடுவர். போதை, பாலியல் பேச்சு, செய்தி, படம் கட்டுப்படுத்தி நிலைப்படுத்துவது கடினம்?


மூர்க்கன்
மார் 26, 2025 14:29

புதிய இந்தியா ??


Ganapathy
மார் 26, 2025 14:11

கொலீஜியம் கொண்டாந்தது காங்கிரஸ்.


ஆரூர் ரங்
மார் 26, 2025 13:58

RSB போன்றவர்கள் போட்ட ... பதவி பெற்றால்.


m.arunachalam
மார் 26, 2025 13:53

ஞாயம் , தர்மம் அடிப்படையில் தீர்ப்பு கிடைப்பது முக்கியம். இதுபோல மூன்றாவது நிலையில்தான் சரியாக பரிசீலிக்கப்படுகிறது என்றால் நாம் எல்லா விதத்திலும் தோற்றுக்கொண்டிருக்கிறோம்


GMM
மார் 26, 2025 13:52

விதிகள் இல்லாமல் சூழலுக்கு தகுந்த நடவடிக்கை அரசு நிர்வாகம் பொறுப்பு. போலீஸ் வக்கீல் பாலியல், தீண்டாமை போன்ற வழக்கை ஆரம்பம் நிலையில் விசாரிப்பதை தவிர்ப்பது நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை