உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!

நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில், குறிப்பிட்ட ஒரு ஜாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற பிரசாரம் பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில், 'கொலீஜியம்' பரிந்துரை மற்றும் நீதிபதிகளின் நியமனங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வது, இடமாறுதல் செய்வது போன்றவற்றை, 'கொலீஜியம்' எனப்படும் மூத்த நீதிபதிகள் கொண்ட குழு முடிவு செய்கிறது.இந்த குழு, எவ்வாறு விவாதிக்கிறது, என்ன அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்கிறது என்பது பற்றிய விவரங்கள் இதுவரை வெளியானதில்லை.இதனால் கொலீஜியம் நடைமுறை பற்றி அவ்வப்போது புகார் எழுவது வழக்கம். மேல் ஜாதியினர் ஆதிக்கம் இருப்பதாகவும், நீதிபதிகள் தங்கள் உறவினர்களையே நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்வதாகவும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.இதற்கு முடிவு கட்டும் வகையில், நீதிபதிகள் நியமனத்துக்கான பரிசீலனை செய்யப்பட்ட பெயர்கள், கொலீஜியம் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் சமீப ஆண்டுகளில், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பரிந்துரையில் இடம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.கடந்த 2022 நவம்பர் 9 முதல் இதுவரையிலான இரண்டரை ஆண்டு காலத்தில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 406 பேருடைய பெயர்கள், கொலீஜியம் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டன.இதில், 221 பேர் பணி நியமனம் செய்வதற்காக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இவர்களில், 192 பேர் நியமனம் செய்யப்பட்டனர்; மீதமுள்ள 29 பேர் பெயர்கள், நிலுவையில் உள்ளன. இப்படி நியமிக்கப்பட்ட 192 நீதிபதிகள் எந்தெந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.இவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் 4 சதவீதம் பேர். பழங்குடியினர் 3.6 சதவீதம் பேர். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 16 சதவீதம் பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 3.6 சதவீதம் பேர். பெண்கள் 17.5 சதவீதம் பேர். சிறுபான்மையினர் 15.9 சதவீதம் பேர் இருப்பது தெரியவந்துள்ளது.இந்த விவரங்கள், உயர் நீதித்துறையானது, மேல் ஜாதியினர் ஆதிக்கம் செலுத்தும் இடம் என்ற பெரும்பாலானோரின் எண்ணத்தை பொய்யாக்குவதாக உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களில் 32 சதவீதம் பேர் மட்டுமே பொதுப்பிரிவினர்.மொத்தம் நியமிக்கப்பட்ட 192 நீதிபதிகளில், 7.2 சதவீதம் பேர் மட்டுமே, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர்கள் என்ற விவரமும் வெளிப்படையாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பர் 2024 மே 5 முதல் (சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம்), உச்சநீதிமன்ற கொலீஜியம், 103 விண்ணப்பதாரர்களில் 51 பேர் பெயரை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது. இந்த 51 பேரில், 11 பேர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர். ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர். இருவர், பழங்குடியினர். 8 பேர் சிறுபான்மையினர். 6 பேர் பெண்கள். இந்த 51 பேரில், பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர்கள் இருவர் என்றும் தெரியவந்துள்ளது.இந்த விவரங்களின் மூலம், மேல் ஜாதியினர், அதிக எண்ணிக்கையில் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்களுக்கு பரிசீலனை செய்யப்படுகின்றனர், நியமிக்கப்படுகின்றனர் என்ற கருத்தும், பிரசாரமும் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Murthy
மே 07, 2025 16:17

இன்னமும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கம்தான் தெளிவாக தெரிகிறது இந்த புள்ளி விவரத்திலும் . ....


Nellai tamilan
மே 07, 2025 16:15

இதை விட சிறந்த வழி ஒன்று உள்ளது. எந்த நாட்டிலும் இல்லாத கொலிஜியம் முறையை நீக்கி விட்டு சட்ட படிப்பு, அனுபவம் மற்றும் தேசிய அளவிலான நீதிபதி தேர்வின் மூலமாக நீதிபதிகளை எப்பொழுது நியமிப்பார்கள். ஜனநாயக நாட்டில் எதற்கு இந்த குழப்பமான கொலிஜியம் முறை?


swega
மே 07, 2025 16:13

மொத்தம் நியமிக்கப்பட்ட 192 நீதிபதிகளில், 7.2 சதவீதம் பேர் மட்டுமே, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர்கள் என்ற விவரமும் வெளிப்படையாக உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. wow


ஆரூர் ரங்
மே 07, 2025 13:43

பட்டியலின மற்றும் சிறுபான்மையினர்களுக்கு ஆதரவான பெரும்பான்மை தீர்ப்புகளை அளித்த நீதிபதிகள் முற்பட்ட வகுப்பினர்தான். ஐயமிருந்தால் சுப்ரீம் கோர்ட்டின் அதிமுக்கிய தீர்ப்புகளை அளித்தவர்கள் பெயர்களைப் பாருங்கள். அவர்களே பழைய ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீர்ப்புகளை அளித்துள்ள விவரமும் புரியும்.


ஆரூர் ரங்
மே 07, 2025 13:36

நீதித்துறை, ஐஐடி, ஐஐஎம் போன்ற இடங்களில் உயர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு இன நபர்கள் விண்ணப்பிப்பதே மிகக்குறைவு. முக்கியமாக SC, முஸ்லிம்கள் ஆர்வம் காட்டுவது குறைவு. கல்வி, அனுபவத் தகுதியிருந்தும் யாரையாவது நிராகரிக்கப்பட்ட விவரம் இருந்தால் வெளிப்படையாக முறையீடு செய்யலாம். அதனை விடுத்து அநாவசிய புகார்கள் தெரிவிப்பது நாட்டின் ஒற்றுமைக்கு கேடு.


vetrivel iyengaar
மே 07, 2025 17:31

அகம்பாவத்தின் உச்சம் அவர்களுக்கு அதற்கு கூட தகுதி இல்லையா ??


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
மே 07, 2025 13:36

இதெல்லாம் ஒரு பொழப்பு.


sridhar
மே 07, 2025 12:47

மருத்துவம், நீதிதுறை போன்றவற்றில் திறமைக்கு மட்டுமே வெயிட்டேஜ் கொடுக்க வேண்டும். ஜாதி மதம் பார்க்கவே கூடாது.


vetrivel iyengaar
மே 07, 2025 13:18

நீட் மேற்படிப்பு தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவனுக்கும் பணம் இருந்தால் மருத்துவ மேல்படிப்பு படிக்கலாம் என்று மோடி அரசு சட்டம் இயற்றி இருக்கு திறமைக்கு வெயிட்டேஜ்


GMM
மே 07, 2025 12:39

வெட்டி கருத்து? மக்கள் தொகையில் எல்லோரும் சட்டம் படிப்பது கிடையாது. மக்கள் எல்லோரும் வரி செலுத்துவது இல்லை. நாட்டில் சட்ட படிப்பு படித்த முற்பட்ட, பிற்பட்ட சாதி விவரம் தெரியுமா? அரசியல், நிர்வாகம், பிறர் வரிப்பண கல்வியில் நாடுமுழுவதும் சாதி வாரி யார் எத்தனை ஆண்டுகள் ஆக்கிரமித்து வாழ்கின்றனர்.? உயர் ஜாதியினர் இந்திய குடிமக்கள் இல்லையா? முன்பு ஆங்கிலேய, நவாப் போன்றோரிடம் அடிமைப்பட்டு சேவகம் செய்த போது ஆக்கிரமிப்பு கவலை வரவில்லை. நாட்டின் நீதிமன்றங்களில் ஆக்கிரமிப்பு என்றால், பிற துறைகளில் மற்றவர் ஆக்கிரமிப்பு விவரம் வேண்டும். திராவிட சமசீர் எங்கும் செய்ய முடியாது?


vetrivel iyengaar
மே 07, 2025 13:09

இதை தான் அப்பட்டமான ஆதிக்க மனோபாவம் என்பார்கள்


Sundaran
மே 07, 2025 12:25

அப்படியே ராணுவத்தில் இட ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் வெளியிடுங்கள். 1000 ஆண்டுகள் ஆனாலும் இட ஒதுக்கீடு ஒழியாது. கோடீஸ்வரன் பிள்ளை எல்லாம் ஒதுக்கீடு பெறுகிறது மாதம் 10000 சம்பாதிப்பவன் பிள்ளைக்கு ஒதுக்கீடு கிடையாது ஏன் என்றால் அவன் உயர் சாதி. இதில் சமத்துவம் எங்கிருக்கிறது .பதவி உயர்விலும் ஒதிக்கீடாம் . ஜனநாயக நாடு ?


vetrivel iyengaar
மே 07, 2025 13:16

மாதம் 70000 சம்பளம் பெறுபவன் ஏழை என்று EWS ஒதுக்கீடு பெறுவதை மறைத்து இப்படி எப்படி எழுத மனசு வருகிறது?? அடையாறில் ..பெசன்ட் நகரில் .... மைலாப்பூரில் ....மாம்பலத்தில் ....999 சதுர அடி பிளாட் வைத்திருப்பவன் ஏழையாம் அவனுக்கும் இடஒதுக்கீடு ... ஏழை என்ற போர்வையில் ....இதில் சமத்துவம் பற்றி பேச வந்துவிட்டிர்


vetrivel iyengaar
மே 07, 2025 12:01

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நாட்டு மக்கள் தொகையில் 25% ... ஆனால் நீதித்துறையில் இவர்கள் நியமனம் வெறும் 7 % பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நாட்டு மக்கள் தொகையில் 60% க்கும் மேல் ஆனால் இவர்களுக்கு வெறும் 19.6 % இப்போது நீதித்துறை யாரால் ஆக்ரமிக்கப்பட்டுக்கொண்டுள்ளது என்பது நிரூபணமாகுதா?? இவர்கள் நியமித்து இருக்கும் பெண்களில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? அங்கும் சமூக அநீதி பரவலாக்கப் பட்டுள்ளது கண்கூடு இவர்களுக்கு எப்படி 10% EWS ஒதுக்கீடு எந்தவிதமான புள்ளிவிவரமும் இல்லாமல் மிக அநியாயமான ஏழைக்கான வரன்முறை வகுத்து வெகு சுலபமாக கிடைத்தது என்பது தெளிவாகுதா ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை