உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடக்கொடுமையே...மக்கள் தொகையை மிஞ்சிய விண்ணப்பங்கள்; அதிர்ச்சியில் அசாம் முதல்வர்

அடக்கொடுமையே...மக்கள் தொகையை மிஞ்சிய விண்ணப்பங்கள்; அதிர்ச்சியில் அசாம் முதல்வர்

குவஹாத்தி: அசாமில் மக்கள் தொகையை விட கூடுதலானோர் ஆதார் கேட்டு விண்ணத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் வகையில், தேசிய குடியுரிமை பதிவேட்டில் பதிவு செய்வதற்காக, மக்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பிக்குமாறு அசாம் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சந்தேகம்

மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையை காட்டிலும் கூடுதலானோர் ஆதார் கார்டுகளை சமர்பித்திருப்பது, சட்டவிரோதமாக மக்கள் ஊடுவிருக்கலாம் என்ற சந்தேகத்தை உண்டாக்கியுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

4 மாவட்டங்கள்

இது தொடர்பாக அவர் கூறியதாவது: மாநிலத்தின் மக்கள் தொகையை விட அதிகமானோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, துப்ரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே மக்கள் தொகையை விட கூடுதலாக ஆதார் கார்டுகளை சமர்பித்துள்ளனர். எனவே, சட்டவிரோதமாக சிலர் குடியேறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அந்த மாவட்டங்களில் மீண்டும் தேசிய குடியுரிமை பதிவுக்காக மீண்டும் விண்ணப்பங்களை பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகலாம்.

கட்டாயம்

தேசிய குடியுரிமை பதிவுக்கு விண்ணப்பிக்காதவர்கள், புதிதாக ஆதார் கார்டுகளை பெற விண்ணப்பிக்க முடியாது. இந்த விதிமுறைகள் தேயிலை தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது. அக்டோபர் 1ம் தேதி முதல் பிற மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்.

அவசியமில்லை

என்.ஆர்.சி., பதிவேற்றத்தின் போது கைவிரல் ரேகையை பதிவு செய்த, 9.55 லட்சம் பேர் மீண்டும் தங்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இவர்கள் எந்தவித நிபந்தனையுமின்றி ஆதார் அட்டைகளை பெறுவார்கள் எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kundalakesi
செப் 08, 2024 12:54

இரண்டு குழந்தைக்கு மேல் பிறந்தால் நாட்டை விட்டு விரட்டி விடுங்கள்


Sivagiri
செப் 08, 2024 12:34

இதுக்கெல்லாம் பார்லிமன்ட் கூட்டு குழு விசாரிச்சாதான் சரிப்பட்டு வரும் , உடனே யாருக்காவது அஜெண்டா நோபல் பரிசு கொடுத்து , பெசல் ஆலோசகரான நியமாக்கலாம் . .


Kumar Kumzi
செப் 08, 2024 14:05

பார்ர்ரா... அறிவு ஹாஹாஹா ???


Sivagiri
செப் 08, 2024 12:31

அதெல்லாம் முடியாது , கோட்டை எல்லாம் அழிங்க , நாம மொத இருந்து கணக்கு பாப்போம் . . .


Kumar Kumzi
செப் 08, 2024 14:03

ஏன் இப்பிடி பம்முது ஹீஹீ பெயரை சொன்னேன்


Nandakumar Naidu.
செப் 08, 2024 12:17

எல்லாம் பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்யா தீவிரவாதிகள். மிகவும் கவனமாக சரிபார்த்து குடியுரிமையை கொடுக்க வேண்டும்.


Kumar Kumzi
செப் 08, 2024 11:46

பங்களாதேஸ் மூர்க்க கள்ளக்குடியேறிகளை களையெடுங்கள் அமைதி மார்க்கம் மிக மூர்கத்தனமா இனப்பெருக்கம் செய்யும்


Indhuindian
செப் 08, 2024 10:52

எம் ஜீ ஆர் முதலமைச்சராக இருந்த பொது ஜாதி சங்கங்ககிட்டே கணக்கெடுப்பு செஞ்சு கணக்கு குடுக்க சொன்னாரு. மொத்தமா கூட்டி பாத்தா அந்த ஜனத்தொகை தமிஷ்னாடு ஜனத்தொகோயோட ரெண்டு மடங்கு இருந்திச்சு


Kumar Kumzi
செப் 08, 2024 11:48

பார்ர்ரா இந்து இந்தியனாம் மூர்க்கம் ஏன் இப்பிடி பம்முது


அப்பாவி
செப் 08, 2024 10:31

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்னிக்கி எடுத்தீங்க? சிரிப்பு போலுஸ் மாதிரி சிரிப்பு சி.எம் மா இருக்கீங்களே?


N Sasikumar Yadhav
செப் 08, 2024 11:39

அஸ்ஸாம் முதல்வர் திருட்டு திமுக தலைவர் மாதிரி ஓட்டுப்பிச்சைக்காக சிலரை திருப்திபடுத்த வேண்டிய அஸ்ஸாம் முதல்வருக்கு அவசியமில்லை . நாடுதான் முதலில் . ஓட்டுப்பிச்சைக்காக நாட்டை காட்டி கொடுக்கிற கும்பலுங்கதான் திராவிட கட்சிகள் மற்றும் புள்ளிராஜா இன்டி கூட்டணியினர்


Kumar Kumzi
செப் 08, 2024 11:54

அப்பாவி கொண்டையில் குல்லா தெரியுது மறைச்சிக்கோ ஹீஹீஹீ


veeramani hariharan
செப் 08, 2024 09:20

One of best CM of our Country. And also well deserving PM Candidate